கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவிலுள்ள றகுமானியா நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் positive என இனம் காணப் பட்டு கொரோனாவினால் தனிமைப் படுத்தப் பட்ட குறித்த குடும்பங்களுக்கு தலா 10ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் (20 ) றகுமானியா நகர் கிராம உத்தியோகத்தர் ஏ. சி.எம்.அப்துல் பரீட் மற்றும் கிண்ணியா பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோத்தர் எம்.எஸ்.சமீமா ஆகியோர் வழங்கி வைத்தனர்.
மேலும் தனிமைப் படுத்தப் பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் உலர் உணவுப் பொதிகள் மிக விரைவில் வழங்க உள்ளதாகவும் கிராம உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.
கிண்ணியா பிரேதச செயலகப் பிரிவிலுள்ள 12 கிராம சேவகர் பிரிவுகள் அண்மையில் தனிமைப் படுத்தப் பட்டமை குறிப்பிடத் தக்கது.

0 comments :
Post a Comment