கொரோனா அலைக்கு மத்தியில் மற்றுமொரு சவால் : மக்களை விழிப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது !நூருல் ஹுதா உமர்-
மது நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் இந்த சூழ்நிலையில் மற்றுமொரு சவாலாக டெங்கும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. தற்போது மழைகாலம் ஆரம்பித்து இருப்பதனால் டெங்கு பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. எமது வீடுகள், அலுவலகங்கள் அடங்கலாக நீர் தேங்கி நுளம்புகள் பரவும் இடங்களை உடனடியாக சுத்தம் செய்து தங்களையும் தங்களது அயலவர்களையும் பாதுகாத்து கொள்ளுமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு காய்ச்சலினால் ஒரு சிறுவர் பாதிக்கப்பட்டதையடுத்து சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எம்.எம். பைசால் அவர்களின் தலைமையில் கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மூலம் சாய்ந்தமருதில் பல இடங்களில் தீவிரமான முறையில் புகைவிசிறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :