நந்திகிராமில் மமதா "திடீர்" தோல்வி.. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க முடிவு.. பரபர பேட்டிகொல்கத்தா: 
ந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்வதாகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் மமதா பானர்ஜி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.1622 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சுவேண்டு அதிகாரியிடம் மமதா தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மமதா முதலில் 1200 வாக்குகள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென தோல்வி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டி
இது தொடர்பாக பேட்டி அளித்த மமதா பானர்ஜி, நந்திகிராம் தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன். இருந்தாலும் நான் மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்பேன். நந்திகிராமை குறித்து கவலைப்பட வேண்டாம். நான் நந்திகிராம் தோல்வி அடைய காரணம் உள்ளது.

தீர்ப்பு
நான் மிகப்பெரிய அமைப்பை எதிர்ப்பு போட்டியிட்டேன். நந்திகிராம் மக்கள் என்ன தீர்ப்பு அளிக்கிறார்களோ அதை ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு கவலை இல்லை.

221 இடங்களில் வெற்றி
நாங்கள் 221 இடங்களில் வெல்கிறோம். பாஜக தேர்தலிலேயே தோல்வி அடைந்துவிட்டது. தேர்தல் ஆணையம் கடைசியில் முடிவை மாற்றிவிட்டது. நான் வெற்றிபெற்றதாக அறிவித்துவிட்டு பின் முடிவை மாற்றிவிட்டது.

கோர்ட்
நாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம். தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடுப்பேன். தேர்தல் ஆணையத்தின் செயல் தவறானது. தேர்தல் ஆணையம் இப்படி செயல்பட கூடாது. தேர்தல் ஆணையத்தின் கொடுமைகளை நாங்கள் எதிர்கொண்டோம். பாஜக தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டது

கீழ்த்தரமான அரசியல்
இப்போது கீழ்த்தரமான அரசியலை அந்த கட்சி செய்கிறது. எங்களுக்கு வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். கொரோனாவிற்கு எதிராக பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதில் முழு கவனத்தை செலுத்துவேன், பதவி ஏற்பு விழா சிறிய அளவில் மட்டுமே நடக்கும், என்று மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :