வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்று ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர். உங்கள் தலைமையின் கீழ் மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்வோம். உங்களுக்கு எனது வாழ்த்துகள் என்றும் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.
சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதலே எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 156 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி 78 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. அமமுக, நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை. பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சிக்கட்டிலில் அமரப்போகிறது. முதல்வராக பதவியேற்கப்போகும் மு.க ஸ்டாலினுக்கு நாடு முழுவதிலும் இருந்து பல தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

0 comments :
Post a Comment