இதற்கமைவாக நாளை முதல் தேசிய அடையயாள அட்டையை அடிப்படையாகக்கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதி உண்டு. மகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும்..
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக கடந்த 13 ஆம் திகதி இரவு 11.00 மணி முதல் ,நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தும் வகையில் பணயக் கட்டுப்பாட்டுக்கு ஜனாதிபதி நடைவடிக்கை மேற்கொண்டார்.
இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு எந்தவித தடையுமின்றி இதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பணிப்புபரைக்கு அமைவாக சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment