சமூக அக்கறையும் துணிவும்மிக்க அரசியல் ஆளுமை கே.ஏ. பாயிஸ்எம்.எஸ்.எம்.ஸாகிர்-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சரும் புத்தளம் நகர சபைத் தலைவருமான கே.ஏ. பாயிஸின் திடீர் மறைவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மர்ஹூம் நைனா மரைக்காருக்குப் பின்னர் புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருந்த நிலையில் தேசியப் பட்டியலினூடாக பாராளுமன்றம் சென்ற கே.ஏ. கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். அக்காலப் பிரிவில் நாடளாவிய ரீதியில் கால்நடை அபிவிருத்தி தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் குறித்த அமைச்சின் செயற்றிட்டங்களை முனைப்புடன் நிறைவேற்றினார்.

1990ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது அவர்களில் பெரும்பாலானோர் புத்தளத்திலேயே குடியேறினர். அவர்களை புத்தளம் மக்கள் அரவணைத்து அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முன்னெடுத்தனர். அதில் கே.ஏ. பாயிஸின் பங்களிப்பு மகத்தானது.

மிகவும் சுறுறுசுப்பாகவும் துணிச்சலுடனும் அரசியல் களத்தில் செயற்பட்ட பாயிஸ் புத்தளம் மாவட்ட மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளார். புத்தளத்தில் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியை நிறுவுவதில் அயாராத முயற்சியெடுத்து வெற்றியும் கண்டார். புத்தளம் திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையத்தை நிறுவுவதிலும் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது. புத்தளம் பாடசாலைகளில் நிலவிய வளப் பற்றாக்குறைகளை நிவர்த்திப்பதில் முன்னின்று செயலாற்றினார்.‌ இவ்வாறு தனது அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு அரும் பணியாற்றியுள்ளமைக்கு புத்தளம் மக்கள் சான்று பகர்வர்.

நிறுவனங்கள், சிவில் அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றிய இவர் குறிப்பாக ஊடகத் துறைசார்ந்தோருடனும் மிகவும் நெருக்கமாக செயற்பட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் புத்தளம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ஊடக கருத்தரங்குகளை நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கியமை குறிப்பிடத்தக்கது.

அரசியல்வாதி, சமூக செயற்பாட்டாளர், இலக்கியவாதி, கவிஞர்… என்று பன்முக ஆளுமை கொண்ட அவரது இழப்பு பொதுவாக முஸ்லிம் சமூகத்திற்கும் குறிப்பாக புத்தளம் மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். அவரது மறைவினால் புத்தளம் அரசியல், சமூகத் தளத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் ஈடு செய்ய இயலாதது.

வல்ல இறைவன் அவரத தவறுகளை மன்னித்து அவரது அரசியல், கல்வி சமூகநல மற்றும் பொதுப் பணிகளை அங்கீகரித்து உயர்ந்த சுவன பாக்கியத்தை வழங்குவானாக!
அன்னாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் புத்தளம் மக்களுக்கும் வல்ல இறைவன் அழகிய பொறுமையை நல்குவானாக! என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :