பாலஸ்தீன மக்களையும், புனித பிரதேசத்தையும் பாதுகாப்பது யார் ? துருக்கி படைகள் அங்கு செல்லுமா ?பாலஸ்தீன மக்கள் மீது யூதர்களின் திட்டமிட்ட தாக்குதல் காரணமாக அங்கு தொடர்ந்து பதட்டநில்லை காணப்படுகின்றது. துருக்கிய அதிபர் ஏடோர்கான் அவர்கள் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் உரையாடி வருகின்றார்.

உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் முதன்மை வல்லரசாக துருக்கி காணப்படுகின்றது. ஓட்டோமான் இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு தலைமைதாங்கிய துருக்கியானது, யூதர்களின் திட்டமிட்ட சதியினால் சிதைவடைந்தது.

இன்று உலகின் ஆளில்லா ட்ரோன் தாக்குதல் விமான தயாரிப்பில் துருக்கி முன்னிலை வகிப்பதுடன், இவ்விமானங்களை வாங்குவதற்காக பல முன்னணி நாடுகள் போட்டிபோடுகின்றன. இது அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகளை ஆச்சர்யமடைய செய்துள்ளது.

உள்நாட்டு அரசியலில் இராணுவத்தின் கெடுபிடி காரணமாக பாகிஸ்தானை போன்று துருக்கியிலும் இராணுவ ஆட்சி நிலவியது. இறுதியாக இன்றைய ஜனாதிபதியான ஏடோர்கானை ஆட்சி கவிழ்ப்பதில் துருக்கி ராணுவத்தினர் தோல்வியடைந்த பின்பு ஆட்சி அதிகாரத்தில் ஏடோகானின் கை ஓங்கியுள்ளது.

ஈராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சியில் இருக்கும்போதே துருக்கி இராணுவத்தினர் அத்துமீறு ஈராக்கினுள் பிரவேசித்து குர்திஸ் கெரில்லாக்களை கட்டுப்படுத்தினார்கள்.

வடக்கு சிரியாவில் ஐ.எஸ் இயக்கத்தின் வீழ்ச்சிக்கு பின்பு அப்பகுதிகளின் சிலவற்றில் துருக்கி படைகள் நிலைகொண்டுள்ளது. துருக்கி படைகளை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு சிரியா படைகளும், அதன் ஆதரவு இயக்களும் தாக்குதல் நடத்தியும் தனது ட்ரோன் விமானங்களைக்கொண்டு அனைத்து தாக்குதல்களையும் துருக்கி படையினர் முறியடித்தனர்.

அதுபோல் லிபியாவின் தலைநகர் திரிப்பொலியில் துருக்கிய படையினர் நிலைகொண்டுள்ளதுடன், கலிபா கப்டரின் படைகள் தலைநகரை கைப்பெற்றிவிடாமல் போர் செய்வதற்கு லிபியாவுக்கு களத்தில் நின்று துருக்கி உதவிக்கொண்டிருக்கின்றது.

அத்துடன் கடந்த வருடம் அசார்பைஜானுக்கும், ஆர்மேனியாவுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தில் துருக்கி அசார்பைஜானுக்கு களத்தில் நேரடி உதவிகளை வழங்கியது. இதில் நாகோர்ணா-கராபக் என்ற இஸ்லாமியர்களின் நகரத்தை ஆர்மேமியாவிடமிருந்து கைப்பேற்றுவதற்கு துருக்கியின் ட்ரோன் விமானங்களே பிரதான காரணமாகும்.

மத்தியதரை கடல் பகுதியின் அடியில் கண்டுபிடிக்கப்பட்ட வளங்களை கையகப்படுத்துவதில் கிரீஸ் நாட்டினை தனது கடற்படைகள் மூலம் துருக்கி அச்சுறுத்தி வருகின்றது.

அத்துடன் சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கு இடையில் ஏற்பட்ட பதட்டத்தில் துருக்கி உக்ரைனுக்கு நேரடியாக ஆதரவு வழங்கியதுடன் தனது அதிகளவான ட்ரோன் ஆளில்லா விமானங்களை உக்ரைனுக்கு வழங்கியது. மட்டுமல்லாது ஆபிரிக்காவிலும் துருக்கி தனது காலை பதித்துள்ளது.

இவ்வாரெல்லாம் ஒரு வல்லரசு போன்று சம்பந்தம் இல்லாத இடங்களிலெல்லாம் மூக்கை நுளைத்துவருகின்ற துருக்கியானது தனது உம்மத்துக்களுக்கு குறிப்பாக மக்காவுக்கு அடுத்ததாக புனித நகராக கருதப்படுகின்ற மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள பாலஸ்தீனுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலுக்கு என்ன செய்யப்போகின்றது என்பதுதான் இன்று உலக இஸ்லாமியர்களின் எதிர்பாப்பாகும்.

எனவே உலக இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் உரையாடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல் துருக்கிய படைகள் அல்லது கூட்டு இஸ்லாமிய நாட்டு படைகள் பாலஸ்தீன மண்ணுக்கு செல்ல வேண்டும். இது கடினமான காரியமாக இருந்தாலும், நேரடியாக பாலஸ்தீனர்களின் உதவிக்காக களத்தில் இராணுவம் செல்வதை தவிர வேறு எந்தவித உதவிகள் மூலமும் யூத கொலைகாரர்களை கட்டுப்படுத்த முடியாது.

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :