பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அநியாயமான கைதுக்கு எதிராக கரைதுறைப்பற்று பிரதேச சபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம்!ஊடகப்பிரிவு-
கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அநியாயமாக கைது செய்யப்பட்டிருப்பதை கண்டித்து, இன்று (06) முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையில் தனி நபர் கண்டனப் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது.

மக்கள் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர் ரனிஸ்லா அவர்களினால் கொண்டுவரப்பட்ட இந்த தனிநபர் கண்டனப் பிரேரணை, சபையின் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

குறித்த கண்டனப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கெளரவ ரிஷாட் பதியுதீன் அவர்கள் அநியாயமான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரது கைது தொடர்பாக தொடர்ச்சியாக எதிர்கட்சி உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு வருவதுடன் நாடெங்கிலும் மக்களால் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றது.
எந்த விதமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவரை இந்த அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைது செய்து தடுத்து வைப்பதானது ஒரு மிகப்பெரிய ஜனநாயக விரோத செயல் என்பதோடு ஒரு பாரிய மனித உரிமை மீரளுமாகும். அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டிக்கும் வகையில் எமது பிரதேச சபை கண்டன தீர்மானம் ஒன்றினை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என இந்த கெளரவ சபையினை வேண்டிக்கொள்கிறேன்.

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் இந்த மாவட்ட மக்களின் பிரதிநிதி என்பதுடன் நமது மாவட்ட அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :