தமிழர்களின் ஆயிரம் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலிருக்க சாணக்கியன் முஸ்லிங்களுக்காக பேசுவது போன்ற நடிப்பு எடுபடவில்லை : தே.கா. வேட்பாளர் கே.எல். சமீம் எல்.எல்.பிநூருல் ஹுதா உமர்-
டந்த காலங்களில் இணைந்த வடகிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்கள் பட்ட கஷ்டங்களை பார்த்து அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க தேசிய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான இப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவினால் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக தமிழீழ விடுதலை புலிகளின் ஆதிக்கம் கோலோச்சிய காலத்தில் யாருக்கும் பயப்படாமல் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வடக்கையும் கிழக்கையும் பிரித்தார். அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வெளிநாட்டு சக்திகளின் அஜந்தாக்களுக்கு இயங்கும் சிலரும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் போன்றோரும் வரிந்துகட்டிக்கொண்டு வடகிழக்கை இணைக்க முனைகிறார்கள். அது ஒருபோதும் நடக்க இந்த நாட்டின் பிரஜைகள் அனுமதிக்கமாட்டார்கள் என தேசிய காங்கிரசின் இறக்காமம் பிரதேச கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளர் அல்ஹாபிழ் கே.எல். சமீம் எல்.எல்.பி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அண்மையில் தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நீண்டகாலமாக வெளிநாட்டில் ஜீவிதம் நடத்திவிட்டு இலங்கைக்கு வந்து அரசியல்வாதியாகியுள்ள இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் வடக்கு கிழக்கு மக்களின் பூர்வீகம், கலாச்சாரம், பிரச்சினைகள் தொடர்பில் நன்கு கற்றுக்கொள்ள வேண்டும். தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பில் நிறைய உள்வீட்டு பிரச்சினைகள் இருக்கும் போது, தமிழ் சமூகத்தில் காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை என பல டசின் பிரச்சினைகள் தொங்கிக்கொண்டிருக்க முஸ்லிம் சமூகத்தை நோக்கி நீலிக்கண்ணீர் வடித்து ஆடு நனைகிறது என ஓநாய்கள் அழுத கதைக நடித்துக்கொண்டு இனவாதம் பேசிவருகிறார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, மட்டக்களப்பு கல்விவலயம், கல்முனை பிரதேச செயலக விவகாரம் என்பன தொடர்பில் முதலில் பூரண அறிவை பெற்றுக்கொள்ள வேண்டும். அவைகள் தனியே முஸ்லிங்களுக்கானது மட்டுமல்ல. அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம், கிறிஸ்த்தவ, சிங்கள மக்களுக்கு சேவை வழங்குவதாகவே அமைந்துள்ளது.

வடக்கையும் கிழக்கையும் பிரிக்க முன்னின்று உழைத்த தேசிய காங்கிரஸ் கட்சியும், கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களும் அவரின் கனவான வடகிழக்கை இணைக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். இந்த நாட்டையும், நாட்டின் ஒற்றுமையையும் சீரழிக்க முனையும் வெளிநாட்டு அஜந்தாக்களை இந்த நாட்டில் அமுல்படுத்த எத்தனிக்கும் எல்லோரும் மூக்குடைவை சந்திக்க வேண்டிவரும் என்றார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :