சாதாரணதரப் பரீட்சையில் பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும் அய்வா கல்லூரி பணிப்பாளரின் ஆசிச் செய்திமினுவாங்கொடை நிருபர்-
கிடைக்கப்பெற்றுள்ள பெறுபேறுகள், வெற்றி தோல்விகள் அல்ல. மாறாக, அவைகள் எமக்கான வாய்ப்புக்கள் மாத்திரமே என, அய்வா கல்லூரியின் பணிப்பாளர் மனநல மருத்துவர் டாக்டர் எம்.எச்.எம். முனாஸிக்,. அண்மையில் வெளியான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத மாணாக்களுக்கு விடுத்துள்ள ஆசிச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த ஆசிச் செய்தியில் டாக்டர் முனாஸிக் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகியன, இலங்கையில் மிகப் பிரதான இரண்டு தடைதாண்டல் பரீட்சைகளாகும்.
ஆனால், இப்பரீட்சைகளின் அடைவுகளும் முடிவுகளும் நமது வாழ்க்கையைத் தீர்மானித்து விடாது.
கிடைக்கப் பெற்றுள்ள பெறுபேறுகள் வெற்றி, தோல்விகள் அல்ல. மாறாக அவை, வாய்ப்புக்கள் மாத்திரமே.
இப்பரீட்சையின் ஊடாக, பல்கலைக்கழக நுழைவு மற்றும் கல்வியியல் கல்லூரி நுழைவு கிடைக்கப் பெற்றவர்கள், அவர்களது பெறுபேறுகள் மூலம் அவ்வாறான இடங்களுக்குச் சென்று தமது உயர் கல்வியைத் தொடர வாய்ப்புப் பெற்றுள்ளனர் என்பதே உண்மை.
ஆகவே, அடுத்த கேள்வி, பெறுபேறுகள் குறைவாகப் பெற்றவர்கள் வாய்ப்புக்களைத் தவற விட்டவர்களா...? என்பதாகும். நிச்சயமாக இல்லை.
அவ்வாறனவர்களுக்கு வாய்ப்பு வழங்கவே, இன்று நம் நாட்டில் ஏராளமான மற்றும் தரமான கல்வியைக் கொடுக்கும் தனியார் பல்கலைக் கழகங்கள் உருவாகி உள்ளன.
எந்தத் துறையாக இருந்தாலும், (வைத்தியத் துறை, பொறியியல் துறை, வர்த்தக முகாமைத்துவத் துறை, கலை கலாசாரத் துறை மற்றும் ஏனைய துறைகள்) அனைத்தும் சமமெனப் பார்க்கப்படும் நிலை உருவாக வேண்டும்.
அத்தோடு, தான் பெற்ற இந்த எதிர்கால உயர்கல்வி எனும் வரப்பிரசாதத்தை, வெறுமனே தமது குடும்பத்திற்குப் பொருளீட்டுவதற்கு மாத்திரம் பயன்படுத்தாமல், தான் சார;ந்த சமூகத்திற்காகவும், தனது சொந்த ஊர் நலன் மற்றும் தாய் நாட்டின் வளர்ச்சி கருதியும் பயன்படுத்துவது முக்கிய அவசியத் தேவையாகும்.
இவ்வகையான கடமைகளைச் செய்யத் தவறினால், எவ்வளவு உயரத்திற்கு இந்தக் கல்வியினால் நாங்கள் முன்னேறிச் சென்றாலோ அல்லது அதன் மூலம் பட்டங்கள், பதவிகள், அதிகாரங்கள் அடைந்து கோடி கோடியாக செல்வங்களைச் சேகரி்த்தாலோ, அதில் எவ்விதப் பயனும் (மறுமையில்) கிடைத்துவிடப் போவதில்லை. தாம் பெற்ற இக்கல்வியும், இறைவனின் ஒரு வகையான சோதனைகளில் ஒன்றே.
அதேவேளை, பரீட்சையில் தோல்வியடைந்த மாணவர்கள் ஒரு போதும் தங்களது சொந்த வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்கள் என்று எண்ணிவிடலாகாது.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற பல மாணவர்களை விட, குறைவான பெறுபேறுகளைப் பெற்ற பல மாணவர்கள், இன்று இறைவனின் ஆசியுடன் தங்களது வாழ்வினில் எட்ட முடியாத பல இலக்குகளை அடைந்துள்ளமையை, நாம் எமது பிரதேசங்களில் கண்கூடாகக் காண்கின்றோம்.
கல்வி என்பது, எதிர்கால வாழ்க்கைக்கான அடைவுகளை அடைய உதவும் ஒரு ஊடகமே அன்றி, அது ஒரு முடிவல்ல.
குறித்த பரீட்சைக்குத் தோற்றி, பெறுபேறுகளைப் பெற்ற அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள் உரித்தாகட்டும்️.
நிச்சயமாக, நாம் யாரும் எதிலும் குறைந்தவர்கள் அல்லர்.
எம்மைப் படைத்த இறைவன், நிச்சயம் நம் அனைவருக்குள்ளும் ஏதோ ஒரு திறமையையும் ஆற்றலையும் வைத்தே படைத்துள்ளான். அது என்னவென்பதை நாமே தேடி, எமது வாழ்வைச் சிறப்புற அமைத்துக் கொள்ள முயற்சிப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :