இந்தியாவின் கொவிட்சூழ்நிலையின் பயங்கரத்தை உணர்த்தும் விதமாக, நேற்று கங்கை நதியில் பல சடலங்கள் மிதந்துள்ளன.பீகாரின்- பக்சார் பிரதேசத்தில் இந்த பயங்கர காட்சி நேற்று காலை பார்க்க கூடியதாக இருந்ததை பல சமூக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
பல சடலங்கள் ஊதியநிலையில் வெடித்து மிதந்து வந்ததாக, பல இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பீகார் உத்தரபிரதேச எல்லைக்குள் அமைந்துள்ள "ச்சோயா" நகர மக்கள் மிதந்து வரும் சடங்களை கண்டு பீதியடைந்துள்ளனர்.
வடக்கிலிருந்து கீழாக மிதந்த இவ்வுடலங்கள் ஈமச்சடங்குகள் நிமித்தம், அடக்கம் செய்யவோ தகனம் செய்யவோ முடியாது போன கொவிட் நோயாளிகளின் உடலங்களாக இருக்கலாம் என, இப்பகுதியின் நிர்வாகத்தினர் நம்புகின்றனர்.
බි "சுமார் 40-45 வரையிலான உடல்கள் மிதந்ததை காணக்கூடியதாக இருந்தது" என ச்சோயா மாவட்ட அதிகாரி அசோக்குமார் தெரிவித்தார்.
கங்கையில் வீசப்பட்ட இச்சடலங்கள் வெடித்துள்ளதாகவும், சுமார் 5 நாட்கள் பிந்திய நிலையில் மிதந்து வந்துள்ளதாக இருக்கலாம் என பிராந்திய அதிகாரிகள் நம்புகின்றனர்.
கடந்த சனிக்கிழமை எரிக்கப்பட்ட சடலங்கள் பல யமுனா நதியில் மிதந்ததை ஹமீர் பூர் நகரத்தில் கண்டதாக அறிக்கைககள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இச்சடங்கலங்கள் சொல்லாமல் மறைத்து வைக்கப்பட்டவைக்கான சாட்சி என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
ම அத்துடன் கடந்த ஞாயிறு அன்று பீகாரின் கதிஹார் வைத்தியசாலையின் நிர்வாகத்தினர், கொவிட் உடலங்ளை கங்கையில் வீசியதாக குற்றஞ்சாட் எழுந்துள்ளது. இவை சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி இருந்தது.

0 comments :
Post a Comment