Admin-message ********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected] Admin-message
Headlines
Loading...
Admin-message

திராவிட முன்னேற்றகழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து



க.கிஷாந்தன்-
மிழக சட்ட மன்ற தேர்தலில் பத்து வருடங்களுக்கு பின்பு அதிகபடியான தொகுதிகளில் வெற்றிக்கொண்டு, தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் சார்பிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை பின்தள்ளி தி.மு.க அமோக வெற்றிப்பெற்றுள்ளது.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் வெற்றி இலங்கை வாழ் இந்திய வம்சாவழியினரின் வாழ்வில் சுபிட்சத்தை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்தே இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்க்கும், திமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

அதற்கமைய எனது தந்தை ஆறுமுகன் தொண்டமானின்; மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததை நன்றியோடு நினைவு கூறுகின்றேன்.
ஆகவே கடந்த காலங்களில் திமுகவுடன் உள்ள உறவை மேலும் கட்டியெழுப்பி நட்போடு பயணிப்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.