புகையிரத திணைக்கள சேவையாளர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடபோவதாக புகையிரத கட்டுபட்டாளர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் மனுர பீரிஸ் தெரிவித்தார்.
புகையிரத கட்டுபாட்டாளர்கள், பொறுப்பதிகாரிகள், பயணச்சீட்டு பரிசோதகர்கள், இயக்குனர்கள், பயணச்சீட்டு வழங்குனர்கள் ஆகியோருக்கே உடனடியா கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை முதல் புகையிரதங்கள் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளன.
இந்நிலையில் தடுப்பூசியினை செலுத்தாத பட்சத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி பணிக்கு திரும்ப போவதில்லை என அந்த சங்கத்தின் பிரதம செயலாளர் மனுர பீரிஸ் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment