1758 குடும்பங்களை கொண்ட புளியாவத்தை இன்ஜஸ்றீ G.s பிரிவு காலவறையின்றி முடக்கம் - பலத்தை பொலிஸ் பாதுகாப்புநோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
திகளவிளான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் கணப்பட்டதையடுத்து புளியாவத்தை நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் இன்ஜஸ்ட்றீ கிராம சேவகர் அலுவலகர் பிரிவு காலவறையின்றி 03-05 மாலை முதல் சுயதனிப்படுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார காரியாலயம் அறிவித்துள்ளது.

நோர்வூட் பிரதேசசபை, பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பகுதிக்குட்பட்ட இன்ஜஸ்ட்றீ தோட்டத்தில்19 பேரும் போடைஸ் தோட்டத்தில் 07 புளியாவத்தை நகரில் 07 பேருமாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 29 ஆம் திகதி புளியாவத்தை பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் 180
பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 29 பேரும் என்டிஜன்
பரிசோதனையில் 02 பேருமாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் அதிகளவிளான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து 03-05 மாலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் புளியாவத்தை நகரம் உட்பட இன்ஜஸ்ட்றீ 319 எல் கிராம சேவகர் அலுவர் பிரிவிற்குட்பட்ட இஞ்ஜஸ்ரி மேல் பிரிவு , இஞ்ஜஸ்ட்றீ கீழ் பிரிவு , பிளிங்கிபோனி , அபகனி, ஹோன்சி, பீரட், பாத்போட், பிளிங்கிபோனி கடைதெரு மற்றும் புளியாவதை நகரப்பகுதிகள் காலவறையின்றி முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் 1758 குடும்பங்களை சேர்ந்த 6798 பேரும் வசித்து வருகின்றமை
குறிப்படத்தக்கது. இதே வேலை என்பீல்ட் 319 ஐ போடைஸ் தோட்டத்திற்கு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பிரதேசங்களுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணியவர்களை அடையாளம் கண்டு பிி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :