மூத்த பன்மகஆளுமை கவிஞர் கல்முனை பூபால் மறைவு!



வி.ரி.சகாதேவராஜா-
ன்முக ஆளுமை கொண்ட மூத்த கவிஞர் கல்முனைப்பூபால் பதுளையில் காலமானார்
கல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட நல்லதம்பி பூபாலரெத்தினம் எனும் கல்முனைப்பூபால் வெலிமடையை வசிப்பிடமாக கொண்டிருந்தார். 'கல்முனை பூபால்' என்ற பெயரில் படைப்புக்களை வழங்கி ஈழத்தின் பிரபல எழுத்தாளராக விளங்கினார்.பின்நாட்களில் ' நீலாபாலன் ' என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். ஆயிரக்கணக்கான கவிதைகளையும் ஏராளமான புத்தகங்களையும் எழுதிப் படைத்துள்ளார்.

பன்முக ஆளுமை கொண்ட இலங்கையின் மூத்த படைப்பாளி ஒருவரை நாம் இழந்திருக்கிறோம். கவிஞர் எழுத்தாளர் சிறுகதை எழுத்தாளர் நாடக ஆசிரியர் மேடைப்பேச்சாளர் தொழிற்சங்கவாதி என பன்முக ஆளுமை கொண்ட மூத்த கவிஞர் கல்முனை பூவால் பதுளையில் காலமானார் என்ற செய்தி இதயத்தை கனக்க வைத்திருக்கிறது.

மரணத்துக்கும் ஒரு காரணம் வேண்டுமே. திடீர் மாரடைப்பால் உயிர் பிரிந்து இருக்கிறது. இறக்கும் போது அவருக்கு வயது 73.

கல்முனையில்' புதிய பறவைகள் 'என்ற இலக்கிய மன்றம் ஒன்றை 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவாக்கிய இவர்இ அந்தப் பிரதேசத்தில் பல்வேறு இளைஞர்களையும் இலக்கிய துறைக்குள் ஈடுபடுத்தி எழுத்தாற்றலையும் படைப்பாற்றலையும் விதைத்த பெருமைக்குரியவர் கல்முனை பூவால்.
கிழக்கிலங்கையின் கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப்படும் நீலாவணனுடன் சமகாலத்தில் பயணித்த இவர்இ மூத்த படைப்பாளியும் கவிஞருமான
மூ.சடாச்சரனின் மைத்துனர் ஆவார்.

நீலாவணன்மூ.சடாட்சரம் மருதூர் கனி. மருதூர்க் கொத்தன் பேராசிரியர் நுஹ்மான் பாவலர் பஸீல் காரியப்பர்.. உட்பட பெரும் படைப்பாளிகளுடன் சமகாலத்தில் பணியாற்றிய ஒரு இலக்கிய ஆளுமையே கல்முனை பூவால்.
1976 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெலிமடையில் குடிபெயர்ந்தனர் தோட்டக் கம்பெனி ஒன்றில் எழுதுவினைஞராக பணியாற்றி தோட்ட நிர்வாகத்தின் நன்மதிப்பைப் பெற்ற இவர் தோட்டத் தொழிலாளர்களுக்காகவும் குரல் கொடுத்தவர்.

15-க்கும் மேற்பட்ட நாடகங்களை மேடை ஏற்றியுள்ள நீலா பாலன் சுமார் 75 கவியரங்குகளுக்கு தலைமை தாங்கி இருக்கிறார் என்பது பெருமைக்குரிய விடயம்.
'தமிழோசை ' என்ற கையெழுத்து பிரதிக்கும் நீண்ட காலம்ஆசிரியராக இருந்தவர். 'இலங்கை பழுத்துப் புழுக்கள் ' 'கடலோர தென்னைமரம்' ஆகிய இரண்டு நாடகங்களை மேடையேற்றி பெரும் வரவேற்பைப் பெற்றவர்.
நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ந்தும் கவிதைகள் எழுதி கவிதை மன்னராகவே திகழ்ந்த நீலா பாலன் 'பாவரவு கவிதை வித்தகர் கவிமாமணி தமிழ்மணிகவிதைப் பருதி' ஆகிய பட்டங்களுக்கு சொந்தக்காரராக திகழ்ந்தார். அதேநேரம் அரசாங்கத்தின் உயர் விருதான 'கலாபூசணம் ' விருதும் இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :