தலவாக்கலை ட்றூப் மற்றும் கொரின் தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 300 ற்கு மேற்ப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க பேதமன்றி ( 22.4.2021) காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பள அதிகரிப்பை தொடர்ந்து தோட்ட தொழிலாளர் ஒருவர் நாளொன்றுக்கு 20 கிலோ தேயிலை பறிக்கப்பட வேண்டும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 50 கிலோ தேயிலை பறிக்கப்பட வேண்டும் என்று தோட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாள் ஒன்றுக்கு 20 கிலோ தேயிலை கொழுந்து பறிக்காவிட்டால் 1000 ரூபா சம்பளம் வழங்கப்படமாட்டாது எனவும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை வழங்கப்பட்டால் 50 கிலோ தேயிலை கொழுந்து பறித்தால் மட்டுமே அன்றைக்கு பெயர் வழங்கப்படும் எனவும் தோட்ட நிர்வாகம் தெரிவித்ததையடுத்து இதற்கு ஆட்சேபனை தெரிவித்து ட்றூப் மற்றும் கொரின் பிரிவு தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட தொழிற்ச்சாலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.சக்திவேல் அத்தோட்ட அதிகாரியுடன் இப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடி தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்வை பெற்றுக்கொடுத்ததையடுத்து தொழிலாளர்கள் தங்களது பணிக்கு திரும்பினர்.
இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.சக்திவேல் அவரிடம் தொடர்பு கொண்டபோது அவர் தெரிவித்ததாவது தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பின் பின்னர் தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு பல்வேறு கெடுபிடிகளை செய்து வருகின்றது. தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கும் தேயிலை கொழுந்தின் நிறைக்கும் சம்பந்தம் கிடையாது. அவர்களுக்கு இவ்வளவு காலமும் வழங்கப்பட்ட சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

18 கிலோ கொழுந்து பறித்தால் சம்பளம் வழங்கப்பட வேண்டும். வேலை நாட்களை குறைக்க இயலாது.
வீணான கெடுபிடிகளை தொழிலாளர்களுக்கு விதிக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார். இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வட்டார அமைப்பாளர் பிலிப் அவர்களும் உடன் இருந்தார்.

0 comments :
Post a Comment