ஓட்டமாவடி பாலக்காட்டு வெட்டை குளத்தை பாதுகாக்க நடவடிக்கை



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட நாவலடி பிரதான வீதியோரம் அமைந்துள்ள பாலக்காட்டு வெட்டை குளத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள குளத்தையும் அதனை அண்மித்த பகுதியையும் சிலர் நாசப்படுத்திச் செல்கின்றனர்.

இக் குளத்தில் வாகனங்களை கழுவுவதால் அதிலிருந்து வெளியேறும் எண்ணெய் குளத்தில் கலப்பதினால் நீர் மாசடைகின்றது.

அத்துடன், குளத்திலும் அதனை அண்மித்துள்ள பகுதியிலும் கழிவுப் பொருட்கள், மிருகங்களின் எச்சங்கள் போன்றவற்றை கொட்டிச் செல்வதினால் அப் பகுதி துர்நாற்றம் வீசும் பகுதியாகவும் மாறியுள்ளது.

அதனை தடுத்து நிறுத்தி குளத்தை பாதுகாக்க எமது பிரதேச சபையின் ஏற்பாட்டில் குளப் பகுதி சிரமதானம் செய்யப்பட்டுள்ளதுடன் குளத்தை நாசப்படுத்தும் நபர்களை கண்காணிக்க அப்பகுதியில் சீ.சீ.ரீ.வி கெமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இதனை மீறிச் செயற்படும் நபர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தவிசாளம் ஏ.எம்.நௌபர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :