றிஸ்லி முஸ்தபாவின் ஏற்பாட்டில்; கடின பந்து கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு



எம். என்.எம்.அப்ராஸ்-

இளைஞர் யுவதிகளின் மத்தியில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தம் முகமாக நடளாவிய ரீதியாக அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது
இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் வகையில், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலில்,அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு கடின பந்து கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி முக்கியஸ்தகரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினர் றிஸ்லி முஸ்தபாவின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது அல் -ஹிலால் வித்தியாலயத்தில் (02)
நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அதிதிகளாக ,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்சவின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி சிபான் மஹ்ரூப், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றொனி இப்ராஹீம் மற்றும் அமைச்சரின் கிரிக்கெட் விவகார இணைப்பாளர் ஜெனரல் டனீஸ் டயஸ் ஆகியோர் கலந்து கொண்டதுடன், மற்றும் றிஸ்லி முஸ்தபாவின் செயலாளர் ஏ.எல். ஜவாஹிர் ,இளைஞர் பாரளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.ரிஹான் மற்றும் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இதன் போது கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :