நல்லிரவில் கடையை உடைத்து சுமார் 11 இலட்சம் கொள்ளை.



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
குணசிங்கபுர டயஸ் பிளேசில் சிற்றி ஸ்டோர்ஸ் கடையை உடைத்து சுமார் 11 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையர்கள் எடுத்தச் சென்றுள்ளனர். நேற்று இரவு கொழும்பில் இடியுடன் கூடிய தொடர் மழை பெய்து கொண்டிருந்த சமயத்தில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் கடையின் முன்பகுதி இரும்பு கதவை உடைத்து உட்புகுந்த கள்வர்கள் கடையின் பட்டறையில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கடை உரிமையாளர் இன்று காலை கடையைத் திறப்பதற்காக வந்த சமயம் கடையின் முன்பகுதி மிகவும் சூட்சுமமான முறையில் உடைத்து கொள்ளை இடம் பெற்றதை கண்டு கெசல்வத்தை பொலிஸாருக்கு அறிவித்ததையிட்டு பொலிஸார் மோப்பநாய்கள் சகிதம் வந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த கடையின் சி.சி.ரி கமராவை அடுத்த பக்கம் திருப்பிவிட்டு கொள்ளையர்கள் கடையினுல் நுழைந்துள்ளனர். இதன்போது கடையில் இருந்து சி.சி.ரி கமரா உபகரணங்களையும் எடுத்துச் சென்றுள்ளதாகவும் அருகில் உள்ள பாமசி ஒன்றின் கமராவையும் அடுத்த பக்கம் திருப்பி வைத்துவிட்டே கடையை உடைத்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதுவரை எவரும் கைது செய்யப்பட வில்லை. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :