பத்திரிகையாளர் சித்தீக் காப்பன் சிகிச்சைக்காக டெல்லிக்கு மாற்றம்! உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு !!



புது டெல்லி : மலையாள பத்திரிகையாளர் சித்தீக் காப்பனை சிகிச்சைக்காக டெல்லிக்கு மாற்றுவதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா வரவேற்றுள்ளது. மேலும் இவ்விசயத்தில் நீதிக்காக ஆதரவு தெரிவித்த தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் ஆகியோரை வெகுவாக பாராட்டியுள்ளது. இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் ஓ.எம்.ஏ. சலாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலையாள பத்திரிகையாளர் சித்தீக் காப்பனை சிகிச்சைக்காக டெல்லிக்கு மாற்றுவதற்கான உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு, சித்தீக் காப்பன் மற்றும் பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவிகளின் நீதிக்காக குரல் எழுப்பிய அனைத்து குடிமக்களுக்கும், மனசாட்சியுள்ள அனைத்து குழுவினருக்கும் கிடைத்த ஒரு தற்காலிக நிவாரணமாகும்.
அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அப்பட்டமான பொய்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயன்றார். சட்டபூர்வமாகவும் ஜனநாயக ரீதியாகவும் செயல்படும் அமைப்பான பாப்புலர் ஃப்ரண்டுடன் தொடர்பில் இருப்பதே குற்றம் என்ற தோற்றத்தை உருவாக்க அவர் முயன்றார். மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு சில மாநிலங்களில் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இது ஒரு வெளிப்படையான பொய். ஜார்கண்ட் மாநில பாஜக அரசாங்கம் மட்டுமே பாப்புலர் ஃப்ரண்டை ஜனநாயக விரோத மற்றும் சர்வாதிகார நடவடிக்கையின் மூலம் தடை செய்தது. அந்த தடையும் உயர் நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட பின், மீண்டும் தடை செய்துள்ளது. இந்த விவகாரம் ஆதாரமற்ற, கற்பனைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் உயர்நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வரும்போது, மீண்டும் ரத்து செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
பத்திரிகையாளர் சித்தீக் காப்பன் மற்றும் கைது செய்யப்பட்ட மாணவர் தலைவர்கள் உ.பி. காவல்துறையினர் உருவாக்கிய பொய்யான கட்டுக்கதைகளின் பலிகடாக்கள் ஆவர். அனைத்து அப்பாவிகளும் சிறையிலிருந்து வெளியே வரும் வரை நீதி முழுமையடையாது. சொலிசிட்டர் ஜெனரலின் தவறான கூற்றுகள் மற்றும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த அவர் மேற்கொண்ட தீங்கிழைக்கும் முயற்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. சிவில் உரிமை அமைப்புகள், பத்திரிகையாளர் அமைப்புகள், அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் நீதிக்கு ஆதரவாக நிற்பதை பாப்புலர் ஃப்ரண்ட் பாராட்டுகிறது. மேலும் இவ்விசயத்தில் நீதி கிடைக்கும் வரை அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது. என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :