கல்முனையில் இளம் தொழில் முனைவோருக்கு அரச காணி வழங்கல் நேர்முகப்பரீட்சை.



றாசிக் நபாயிஸ், மருதமுனை-
னாதிபதியின் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்க காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப்பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்று வருகின்றது.

அந்த வகையில், கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப்பரீட்சை செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் ஜே.லியக்கத் அலி தலைமையில் நடைபெற்ற நேர்முகப்பரீட்சையில் காணி உத்தியோகத்தர்களான ஏ.ஜெமீல், ஏ.எச்.எம்.ஹிபாயத்துல்லாஹ், காணி பயன்பாட்டு
அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எம்.ஜஹ்பர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல்.றமீஸ், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.பி.ஏ.ஜெலீல் மற்றும் பட்டதாரி பயிலுனர்கள் என பலர்
கலந்து கொண்டனர்.
கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் 1,431 நபர்களுக்கு தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப் பரீட்சைக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ஜே.லியக்கத் அலி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :