பிரபல கவிஞர் ஏறாவூர் தாஹிர் எழுதிய 'மறக்க மறந்த மனிதம்" எனும் நூல் வெளியீட்டு விழா ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
101 கவிதைகளைக்கொண்ட இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸீர் தலைமை வகித்தார்.
ரீ. கோபாலகிருஷ்ணன் செங்கதிரோன் மற்றும் தமிழ் பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏஎம் முபாஸ்தீன் ஆகியோர் இந்நூல் தொடர்பான ஆய்வுரை நிகழ்த்தினர்.
சமூகää சமய மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களுக்கு நான்கு கட்டங்களாக நூல்கள் கையளிக்கப்பட்டன.
ஏறாவூர்ப் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்எல். முகம்மது ஹனிபா, ஓட்டமாவடி பிரதேச சுகாதார வைத்தியதிகாரி எம்எச்எம். தாரிக் ஆகியோர் உட்பட கல்வித்துறைசார் அதிகாரிகள், கவிஞர்கள் மற்றும் கலைஞர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நூலாசிரியர் ஏறாவூர் தாஹிர் முன்னாள் காதி நீதிபதி மௌலவி ஏஎம். இப்றாஹிமிற்கு நூலின் முதலாவது பிரதியை வழங்கி நூல் வெளியீட்டினை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பம் செய்தார்.
கவிஞர் சுபைர் இந்நூலின் கவியொன்றை பாடலாக மெட்டமைத்து இசைத்தார்.
இங்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்ட நூலாசிரியர் ஏற்புரை வழங்கினார்.
இந்த நூல் நூலாசிரியரின் தாய்க்கு சமர்ப்பணமாக எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments :
Post a Comment