கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயலுக்குச் சென்ற ஒருவர் திடிர் மரணம்.



எப்.முபாரக்-
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயலுக்குச் சென்ற ஒருவர் திடிர் மரணமடைந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் இன்று(27) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேராறு,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சேகுஇஸ்மாயில் பைசர் என்பவரே இவ்வாறு வயக்குச் சென்ற நிலையில் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் தற்போது வயல் வெளியில் காணப்படுவதோடு,குறித்த மரணம் மாரடைப்பு காரணமாக ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதாவது விதத்தில் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்ததோடு,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :