பாலமுனைக்கு பொதுக்கிணறு மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தார் பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர்



மாளிகைக்காடு நிருபர்-
டந்த சில மாதங்களாக கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினர் இளம் முஸ்லிம் பெண்கள் அமைப்பினரின் உதவியுடன் அம்பாரை மாவட்டத்தில் மனித நேய சமூக பணிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். அதனடிப்படையில் பாலமுனை ஜனாஸா அடக்கஸ்தலத்தில் மிக நீண்டகால தேவையாக இருந்த மையவாடிக்கு குடிநீர் மற்றும் நீர்தாங்கி இல்லாத குறையை நிபர்த்தி செய்து கொடுத்ததுடன் கல்முனை மாநகரசபை பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் ஜனாஸா நலன்புரி வேலைத்திட்டத்திற்கு ஒரு தொகை அன்பளிப்பும் வழங்கி வைத்தார்.

அத்துடன் பாலமுனை மசாஹிருல் உலூம் அரபுக்கலாசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவைப்பாடாக காணப்பட்ட பொதுக்கிணற்றையும் உத்தியோகபூர்வமாக இந்நிகழ்வில் கையளித்ததுடன் நிகழ்வின் நினைவாக மரக்கன்றினையும் நட்டிவைத்தார். இந்நிகழ்வில் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :