றியலாஸ் ஆசிரியர் எழுதிய "யசோதரையின் வீடு" நூல் சனிக்கிழமை வெளியாகிறது !



நூருல் ஹுதா உமர்-
சிரியரும், கவிஞருமான மருதமுனையை சேர்ந்த அப்துல் லத்திப் முகம்மட் றியலாஸ் எழுதிய "யசோதரையின் வீடு" எனும் தலைப்பிலான கவிதைத்தொகுப்பு நூலொன்று எதிர்வரும் சனிக்கிழமை (20) காலை மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் மருதமுனையில் வெளிவர உள்ளது.

மறைந்த இலக்கியவாதி "கதைசொல்லி எம்.ஐ.எப். ரஊப் அரங்கில்" கலாநிதி சத்தார் எம். பிர்தௌஷின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழாவில் நூல் அறிமுகத்தை எழுத்தாளர் ஜிப்ரி ஹாஸன் நிகழ்த்தவுள்ளதுடன் எழுத்தாளர் உமா வரதராஜன் மற்றும் எழுத்தாளர் அப்துல் றஸாக் ஆகியோர் நூல் பற்றிய கருத்துரையை வழங்கவுள்ளனர். இந்நிகழ்வில் மேலும் பல புகழ் பெற்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பிராந்திய முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :