கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ”தேசிய மகிழ்ச்சி தின” நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல் நேற்று கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் தலைமையில் திருகோணமலை சுதேச மருத்துவ திணைக்கள மாகாண அலுவலகத்தில் இடம்பெற்றது.
இம்மாதம் 20 ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெறவுள்ள மகிழ்ச்சி தின நிகழ்வு தொடர்பான பல விடயங்கள் முன்வைக்கப்பட்டு தீர்மானங்களும் இக்கலந்துரையாடலில் எடு்கப்பட்டன.
இதில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள கணக்காளர் என்.பாலநந்தன், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி எஸ்.நவேந்திர ராஜா, திட்டமிடல் வைத்திய அதிகாரினளான வைத்தியர் எஸ்.சிவச் செல்வம், வைத்தியர் எஸ்.உதயனன், கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எஸ்.துஷிதா, நிலாவெளி மாவட்ட சித்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.நிரன்ஜன் மற்றும் வைத்தியர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment