கொரோனா மரணம்! 181 ஜனாஸா பெட்டிகள் எரிக்கப்பட்டது என்பது தான் உண்மை! -என்கிறார் ஹாபிஸ் நஸீர் எம்பி


குகதர்ஷன்-

பெரும்பான்மை சமூகத்தினருடன் சிறுபான்மை சமூகத்தினர் ஒரு இணக்கப்பாடு அரசியலை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்கின்ற தெளிவு இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமான நசீர் அஹமட் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், முரண்பாட்டு அரசியலை யாரும் செய்ய முடியும். இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியதும் அதன்பிற்பாடு அமைச்சரவையில் ஜனாசா அடக்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனால் நாங்கள் அதனை ஊதாசீனம் செய்தோம். நாங்கள் அடக்கம் செய்வதற்கு ஆறு இடங்களை சமர்ப்பித்தோம் அதன்பிற்பாடு உயர் அதிகாரிகள் வருகை தந்து ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் சூடுபத்தினசேனையை சிபார்சு செய்தனர்.

ஜனாஸாக்களை அடக்கம் செய்யமால் எந்தவிதமான நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளமாட்டேன் என்று கூறியிருந்தேன் அதற்கமைய அடக்கம் செய்து விட்டே நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளேன் முகப்புத்தகத்தில் எழுதுபர்கள் எதையும் எழுதலாம் நாங்கள் ஆதரவு வழங்கியது இதற்காகத்தான் ஆனால் ஏன் பிற்போடப்பட்டது என்று எல்லோருக்கும் தெரியும் அரசாங்கததிற்கு ஆதரவு வழங்கி ஒரு வாரத்தில் கொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு தீர்வு எட்டப்பட்டது என்பதுதான் உண்மை.

நாங்கள் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் முப்பத்திரெண்டு திணைக்களங்களுக்கு சென்று இதற்கான தீர்வினை பெற்றோம் அதனை நாங்கள் ஊடகத்திற்கு தெரிவிக்கவில்லை ஞானசார தேரரரையும் எங்களது குழு சந்தித்தது நான் அதற்கு செல்லவில்லை வெளியில் இருந்து கூச்சலிடுவதால் எதுவும் நடைபெறாது தீர்வு கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம்.

இரணைத்தீவில் அடக்கம் செய்யலாம் என்ற முடிவு வந்ததும் ஏறாவூரை சேர்ந்த பெண்ணின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு தயரான போது அங்கு எதிர்ப்பு அதிகமாக வெளியிடப்பட்டதால் உடனடியாக ஓட்டமாவடியை தீர்மானித்து ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியை தெரிவு செய்தோம்.

ஓட்டமாவடி கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் மையவாடியில் கிறிஸ்தவ பெண் ஒருவரது சடலமும் அடக்கம் செய்யப்பட்டது அதற்காக இந்த பிரதேச மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னிடம் பிரதமர் கேட்டார் ஓட்டமாவடியில் வேறு மதத்தவர்களின் சடலங்களை அடக்குவதற்கு ஏதும் பிரச்சினை வருமா என்று கேட்டார் நான் அப்படி எதுவும் நடக்காது என்று உங்களை நம்பி தெரிவித்தேன்.

எத்தனை ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டது என்று எங்களுக்குத்தான் தெரியும் 181 ஜனாஸா பெட்டிகள் எரிக்கப்பட்டது என்பது தான் உண்மை அச் சம்பவத்திற்குள் அதிகமான மறைமுக விடயங்கள் இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

பிரதேசத்தின் சுகாதாரம், கல்வி, விவசாயம், குடி நீர் பிரச்சினை, நீPர்ப்பாசனம், தேசிய வீடமைப்பு திட்டம், மின்சாரம் சட்ட விரோத மண் அகழ்வு, மற்றும் பிரதேசத்தில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. இந் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.நௌபர், ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எம்.எஸ்.சிஹாப்தீன், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக், பிரதேச செயலக உதவி திட்டப்பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், வாழைச்சேனை பொலிஸ் நிலைய அதிகாரி மற்றும் பிரதேச திணைக்கள அதிகாரிகள், செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :