சாய்ந்தமருது ஸஹ்ரியனின் 21வது பொதுக்கூட்டமும், புதிய சீருடை அறிமுகமும் !!



நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்-
சாய்ந்தமருது ஸஹ்ரியன் விளையாட்டுக் கழகத்தின் 21வது வருடப் பூர்த்தி நிறைவும், புதிய கழக சீருடை அறிமுக விழாவும் சாய்ந்தமருது தனியார் விடுதியொன்றில் இன்று (27) இரவு கழக தலைவர் எஸ்.எச்.எம். ஜிப்ரியின் தலைமையில் இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை கரையோர மாவட்ட அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸ்ஸாக், சரிப் பௌண்டசன் தவிசாளர் தொழிலதிபர் கலாநிதி ஹக்கீம் சரீப், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி முக்கியஸ்தகரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினருமான றிஸ்லி முஸ்தபாவின் செயலாளர் அல்-ஜவாஹிர், ஓய்வு பெற்ற மக்கள் வங்கி முகாமையாளர் எம். மஸூத், சாய்ந்தமருது பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். ஸஹுருத்தின், கழக பொருளாளார் எம்.எச்.நாஸர், கழக முகாமையாளரும் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், என்.எல். பொறியியல் நிறுவனத்தின் பிரதானியும், றிஸ்லி முஸ்தபாவின் இணைப்பாளர் எம்.யூ.எம்.நியாஸ், கிராம நிலதாரி உட்பட கழக வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :