முஸ்லிம் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி - 2021

எம்.எஸ்.எம்.ஸாகிர்-

மார்ச் 8ஆம் திகதி சர்வதேச ரீதியாகக் கொண்டாடப்படும் மகளிர் தினத்தினையொட்டிய சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்ச்சியினை இன்று (08) காலை 10.00 மணிமுதல் பின்வரும் YouTube மற்றும் Facebook இணைப்பினூடாகப் பார்வையிடலாம்.

YouTube
https://youtu.be/HjtJpt3CYS8

Facebook
https://www.facebook.com/1036074906415798/posts/3882924341730826/?d=n

இம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புக்களின் கீழ் சொற்பொழிவாற்றவுள்ளனர்.

1.' சிங்கள மொழி எழுத்தாளர்களை ஊக்குவித்தல் '
எனும் தலைப்பின் கீழ் சிங்கள மொழி மூலம்
(நாவலாசிரியரும், எழுத்தாளருமான திருமதி. ஸனீபா ஸனீர்,

2. 'ஆண் பிள்ளைகளை எப்படி வளர்த்தல்'
எனும் தலைப்பின் கீழ்
கொழும்பு பல்கலைகழக
விரிவுரையாளர், திருமதி. பரீனா ருஸைக்,

3. 'சகவாழ்வு'
எனும் தலைப்பில் ஆங்கில மொழி மூலம்
உலக சமாதான நிறுவனத்தின் இளைஞர் தூதுவரானஸசெல்வி. ஆமினா
முஹ்ஸின்,

4. 'பெண் ஊடகவியலாளர்களின் முக்கியத்துவம்'
எனும் தலைப்பில்,
டெய்லி மிரர் பதிப்பாசிரியர், செல்வி. பியூமி பொன்சேகா

5. 'நவீன சமூகத்தில் பெண்களின் சவால்கள் மற்றும் பெண்களை வலுவூட்டல்'
எனும் தலைப்பில் தமிழ் மொழி மூலம் வழக்கறிஞர்
திருமதி. சுகந்தி ராஜகுலேந்திரா ஆகியோர்
சொற்பொழிவாற்ற உள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :