நிந்தவூர் பிரதேச சபையின் 2021 மார்ச் மாதத்திற்கான 04 வது சபையின் 36 வது கூட்டமர்வு



பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் 2021 மார்ச் மாதத்திற்கான 04 வது சபையின் 36வது கூட்டமர்வு செவ்வாய்க்கிழமை(30) நடைபெற்றது.

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் 2021 பெப்ரவரி மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல் 2021 பெப்ரவரி மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல் தவிசாளர் எம் .எ . எம் . தாஹிர் உரை என்பன தொடர்ச்சியாக இடம்பெற்றன.

பின்னர் 2018ம் ஆண்டு விகிதாசார மற்றும் கலப்புத் தேர்தல் மூலம் உள்வாங்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை காட்சிப்படுத்துதல் ஏ.எம் றுக்கியா என்பவரின் காணி சுவீகரிப்பிற்கான நஷ்டஈட்டுத் தொகையின் மீதிப் பணக் கொடுப்பனவு சம்மந்தமாகவும் உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அது சம்பந்தமாக ஆலோசனை பெறப்பட்டது.

மேலும் மாட்டுப்பளை கடற்கரை வீதியில் தெருலாம்பு பொருத்துதல் கடற்கரை ஓரங்களில் கழிவுகளை வீசுதல் தொடர்பாகவும் உறுப்பினர் ஏ.அஸ்பர் முன்வைத்த முன்மொழிவுகள் முஸ்தபாபுர வட்டார தமிழ் மயானத்தில் மின்விளக்குகள் பொருத்துதல் தொடர்பில் உறுப்பினர் ஏ.அப்துல் வாகிது முன்மொழிவுகள் இக்கூட்ட அமர்வில் கலந்துரையாடப்பட்டதுடன் கடிதங்கள் வாசிக்கப்பட்டு தீர்மானங்களும் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :