இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கை நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனை மேற்கோள்காட்டி ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கட்சித் தலைவர்கள் சந்திப்பின்போது, இந்த விடயத்தை உறுதிசெய்திருப்பதாக மனோ கணேசன் கூறியுள்ளார்.
கோவிட் நெருக்கடியின் பின்னர் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ள இம்ரான் கான், முதலாவதாக இலங்கைக்கும் வருகின்ற 22ஆம் திகதி விஜயம் செய்கின்றார்.
மூன்று நாட்கள் இலங்கையில் தங்கவுள்ள அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட பிரமுகர்களையும் சந்திக்கின்றார்.
எதிர்வரும் 22ஆம் திகதியே இலங்கையின் பொறுப்புகூறல் குறித்து ஐ.நாவில் பிரித்தானியா, விசேட தீர்மானமொன்றை கொண்டுவரவுள்ளது.
இதுவிடயம் குறித்தும் பாகிஸ்தான் பிரதமர் கருத்து வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment