திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான கபில நுவன் அத்துக்கோராள மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இன்று(9) நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வருகின்ற கணித, விஞ்ஞான மற்றும் தகவல் தொழிநுட்ப பாட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வை மாவட்டத்தில் உள்ள நலிவுற்ற மக்களுக்கும் சட்டரீதியாக வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவசியமான பொறிமுறையொன்றை ஏற்படுத்தல் வேண்டும் என்று இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரள தெரிவித்தார்.
2021ம் ஆண்டில் திருகோணமலை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களால் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி முன்மொழிவுகள் இதன்போது குழுவின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்தி, ஒரு பிரதேச செயலகப்பிரிவில் இரண்டு மைதானங்கள் என்றடிப்படையில் மாவட்டத்தில் 22 மைதானங்கள் அபிவிருத்தி ,சியபத வீடமைப்பு திட்டம் , காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், காடழிப்பை தடுத்தல் உட்பட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர். சம்பந்தன், எம்.எஸ்.தெளபீக் , மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள ,கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க ,திணைக்கள தலைவர்கள், பிரதேச அரசியல் தலைமைகள் , திணைக்கள தலைவர்கள்,முப்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment