தமிழ்ப்பிரதேசத்தில் ஒரு மின்குமிழைக்கூட போடமுடியாத அவலநிலை!


வி.ரி.சகாதேவராஜா-

பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தகாரணத்தினால் தமிழ்ப்பிரதேசத்தில் ஒரு மின்குமிழைக்கூட போடமுடியாதாம். தேவையானால் இ.மி.சபை ஊழியர்களைக்கொண்டு போடுமாறு ஆணவத்துடன் கூறுகிறார் மேயர். அப்படியெனின் சபை எதற்கு சபை ஊழியர்கள் எதற்கு? இப்படிப்பட்ட சர்வாதிகார மாநகரசபையை உடனடியாகக்கலைக்குமாறு ஜனாதிபதியையும் ஆளுரையும் கேட்கிறோம்.

இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான கே.சிவலிங்கம் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் சீற்றத்துடன் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

நேற்று கல்முனை ஊடகமையத்தில் நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்துரைக்கையில் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

உறுப்பினர் கே.சிவலிங்கம் கூறுகையில்:

கல்முனை மாநகரின் அதகூடியமக்கள்தொகையுள்ள கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த தமிழ்மக்கள் அதிகூடுதலாக வாழ்ந்துவரும் நகரப்பகுதியான 12ஆம் வட்டாரப்பிரதிநிதிகளாக 4000வாக்குகளுக்கு மேல்பெற்று நாமிருவரும் உறுப்பினர்களானோம்.

எமது பிரதேச பொதுஅமைப்புகள் இளைஞர்கள் பொதுமக்கள் கேட்டுக்கொண்டதற்கமைவாக தமிழ்மக்களுக்கு எதிராகச்செயற்படும் மேயருக்கு எதிராக நாம் பாதீட்டிற்கு எதிராக வாக்களித்தோம்.

நேற்று மாநகரசபைக்குச்சென்று ஆணையாளரிடமும் மேயரிடமும் அடிபட்ட பல்புகளைப்போடவேண்டும் என்றகேட்டபோது நீங்கள் பாதீட்டிற்கு எதிராக வாக்களித்தவர்கள். எனவே நாம் தரமுடியாது.

தேவையென்றால் மின்சாரசபை ஊழியர்களைக்கொண்டு போடுங்கள் என மேயர் இறுமாப்புடன் சொன்னார். இத்தனை சர்வாதிகாரத்தொனியில் இனரீதியாக நடக்கும் அவருக்கெதிராகவே இனி நாம் செயற்படுவோம். எமது மக்களுக்கு இதனைத்தெரியப்படுத்துகிறோம்.

இவ் அராஜகத்தையிட்டு ஜனாதிபதியிடமும் ஆளுநரிடமும் முறையிடவுள்ளேன். தேவையானால் மக்கள் போராட்டமொன்றையும் முன்னெடுக்கவுள்ளோம். என்றார்.

உறுப்பினர் ராஜன் கூறுகையில்:

மக்களுக்கு நன்மைபயக்கும் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளோம். மக்கள் விரும்பாத பாதீட்டை நாம் எதிர்த்தோம். அது எமது உரிமை. மேயருக்கு ஜால்ரா அடிக்கவேண்டிய தேவை எமக்கில்லை.

அவரும் ஒரு உறுப்பினர்தான். ஆனால் அவர் மேயர் என்று பெரும் ஆட்டம் ஆடுகிறார். அவர் எமது கல்முனை வடக்கு பிரதேசசெயகதரமுயர்த்தலுக்கு எதிராகச்செயற்பட்டவர். அங்குள்ள ஆலயத்தை இடிக்க வழக்குப்போட்டவர். அப்படியான இனத்துவேசிக்கு தனமானமுள்ள தமிழன் யாரும் ஆதரவாக வாக்களிப்பானா?

மின்குமிழ் போட முடியாது என்று சொல்ல இவர் யார்? ஊழியர்களைத்தரமுடியாதென்றால் சபை எதற்கு? அரசாங்கத்தை ஏமாற்றுகிறாரா?

இனரீதியாகச்செயற்பட்டு கல்முனையில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களைப்பிரிக்கச்சதிசெய்கிறார்.இனமுரண்பாட்டிற்கு வித்திடுகிறார். மக்கள் மத்தியில் துவேசத்தை விதைக்கிறார்.

தமிழ்ப்பிரதேசத்தை புறக்கணணிக்கும் மேயரின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டை கண்டிக்கிறோம். தமிழ்மக்கள் இவரது இரட்டைவேடத்தை புரிந்துகொள்ளவேண்டும்.

எனவேதான் உடனடியாக சபையைக்கலைக்குமாறு ஜனாதிபதியிடமும் ஆளுநரிடமும் வேண்டுகோள்விடுக்கிறோம்.

விரைவில் அவருக்கெதிராக மக்கள் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம். என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :