பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான 550 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட மாபெரும் கவனயீர்ப்பு பேரணி இன்று (04) ஓட்டமாவடியை வந்தடைந்தது.
நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இடம்பெறும் அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பேரணி பொத்துவிலில் நேற்று (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சிறுபான்மை சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக இடங்களை அபகரித்தல், ஜனாஸா எரிப்பு, இனவாத குழுக்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள் என்பவற்றைக் கண்டித்தே இந்தக் கண்டன நடைபவனி நடைபெற்று வருகின்றது.
இன்று ஓட்டமாவடி பிரதேசத்தை வந்தடைந்த இப்பேரணிக்கு கல்குடா முஸ்லிம்கள் அமோக ஆதரவினை வழங்கி இருந்தனர்.
இந்த மாபெரும் கவனயீர்ப்பு பேரணிக்கு தமிழ் அரசியல் தலைவர்களோடு இணைந்து முஸ்லிம் அரசியல்வாதிகள், பொதுமக்கள் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் இணைந்து தங்களின் ஆதரவுகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment