ஐந்தாவது தொடர் வருடமாக NWC இன் 2021 பாடசாலை ஏழை மாணவ மாணவிகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் இதர பொருட்கள் வழங்கும் நிகழ்வு!


யாக்கூப் பஹாத்-
நிந்தவூரிலுள்ள ஏழைகள் வாழும் அனைத்து 15 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 1800க்கும் அதிகமான மாணவ மாணவிகளுக்கு ருபா ஒன்பது இலட்சம் பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் அடங்கிய பொதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது

ஆறாவது வருடத்தில் கால் பதித்துள்ள நிந்தவூர் நலன்புரிச்சபையின் வருடாந்த சேவைகளில் இது மற்றுமொன்று. நிந்தவூர் நலன்புரிச்சபை 2015 ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இவ்வூரின் பல்வேறு துறைகளில் சேவை புரிந்து வருகின்றது என்பது யாவரும் அறிந்த விடையமே.

இவ்விநியோகத்தில் NWC உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், உப அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள், நிந்தவூர் நலன்புரிச்சபையின் தவிசாளர், நலன்விரும்பிகள் பெற்றார்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். மேலும் பலர் குறிப்பாக சமூக சேவைகள் பணிப்பாளர், மேலதிக செயலாளர், சிரேஷ்ட ஆலோசகர், பொருளாளர் மற்றும் பல உயர்பீட உறுப்பினர்கள் இரவு பகலாகவும் சீரற்ற காலநிலையிலும் பல தியாகங்களுக்கு மத்தியில் இந்த ஏற்பாடுகளை செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :