பொகவந்தலா செல்வகந்தை தோட்ட தொழிலாளர்கள் குப்பைக்கெதிராக ஆர்பாட்டம்நோட்டன் பிரட்ஜ் நிருபர் நிருபர் எம்.கிருஸ்ணா-
தேயிலை மலையில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிராக பொகவந்தலா செல்வகந்தை தோட்ட தொழிலாளர்கள் ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்

நோர்வூட் பிரதேசசபைக்குற்பட்ட ஸ்ரீபுர ஆரியபுர பகுதொயிலுள்ள குப்பைகளை பிரதேசசபை கழிவகற்றல் ஊழியர்கள் குறித்த தோட்ட பகுதியில் கொட்டிவிட்டு செல்வதாக கூறி பொகவந்தலா அட்டன் பிரதான வீதியில் சுகாதர விதிமுறைய பேணி இந்த ஆர்பாட்டம் 06/01 கா லை முன்னெடுக்கப்பட்டது
இதன்போது ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்ததாவது பிரதேசசபையினால் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட பாரதிபுரத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது .
இருந்து பிரதேசசபை கழிவகற்றல் தொழிலாளர்கள் செல்கந்தை தோட்டப்பகுதியில் வீசிவிட்டு செல்வதால் துர்நாற்றம் வீசுவதால் தொழில் செய்யமுடியாதுள்ளதாக குற்றம் சுமத்தியதுடன் இது தொடர்பில் நோர்வூட் பிரதேசசபை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர் .

ஆர்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைத்தந்த நோர்வூட் பிரதேசசபை தலைவர் ரவி குழந்தைவேல் தெரிவித்ததாவது..

ஸ்ரீபுர மற்றும் ஆரிய புர பகுதியில் குப்பைகளை வகைப்படுத்தி தொடந்து பிரதேசசபையினூடாக சேரிக்கப்பட்டு கொண்டு செல்வதாகவும் செல்வகந்தை தோட்ப்பகுதியில் குப்பைளை கொட்டுவது பிரதேசசபையல்ல அவ்வழியில் வேலைக்கு செல்பவர்களே இவ்வாறு வீட்டு கழிவுகளை வீசிவிட்டு செல்வதாக குற்றம் சாட்டியதுடன் உரியவர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்ததுடன் இது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :