அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான மருத்துவ உபகரணங்கள் வழங்குதலும் கட்டிட திறப்பு விழாவும்.நூருல் ஹுதா உமர் ,ஐ.எல்.எம். நாஸிம்-
ம்மாந்துறை பிராந்திய மக்களின் மிக நீண்டகால சுகாதார தேவைகளை நிறைவேற்றுமுகமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான மருத்துவ உபகரணங்களை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எச்.எம். அஸாத் அவர்களிடம் நேற்று (12) கையளித்தார்.

அத்துடன் புதிதாக வைத்திசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கிளினிக் கட்டத்தொகுதி மற்றும் வைத்தியர்களுக்கான தங்குமிட கட்டத்தொகுதி என்பனவும் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் றஜாப்,பிராந்திய திட்டமிடல் வைத்தியர் டாக்டர் எம்.சி.எம். மாஹிர், வைத்தியசாலை திட்டமிடல் வைத்தியர் நியாஸ் அஹமட், வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :