நித்திரையிலிருந்த சிறுவன் பாம்பு தீண்டி மரணம் - நோட்டன் - ஒஸ்போனில் சோகம்



நோட்டன் பிரிஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
நித்திரையில் இருந்த சிறுவன் ஒருவன் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக நோட்டன் பிரிஜ் பொலிஸார் தெரிவித்தனர்

ஒஸ்போன் தோட்டதை சேர்ந்த 12 வயதுடைய ரொபட் தோபிய எஸ்கர் என்ற சிறுவனே 11/01/2021 அதிகாலை இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்,

அதிகாலை ஒரு மணியளவில் ஆழ்ந்த நித்திரையிலிருந்த சிறுவனின் கழுத்தில் பாம்பொன்று இருப்பதை கண்ட பெற்றோர் பாம்பை அடித்து வீசிவிட்டு மீண்டும் நித்திரை கொண்டுள்ளானர்.

இந் நிலையில், அதிகாலை நான்கு மணியளவில் குறித்த சிறுவன் மயக்கம் வருவது போலிருப்பதாக பெற்றோரிடம் கூறியதையடுத்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசலையில் கொண்டு செல்கையிலே உயிரிழந்துள்ளர்
நோட்டன் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 07 கல்வி பயிலும் சிறுவன் பசித்தவன் குறுந்திரைப்படத்திலும் பாடசாலை மாணவனாக நடித்துள்ளார்
மேலும் , சிறுவனை தீண்டிய பாம்பை இறந்த நிலையில் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்குற்படுத்தப்பட்டபோது பாம்பு தீண்டீ விசமானதாலே உயிரிழந்துள்மை தெரியவந்துள்ளது

மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோட்டன் பிரிஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :