கல்முனை மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்க துரித கதியில் நடவடிக்கை !அபு ஹின்ஸா-
ல்முனையில் முடக்கப்பட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்கள், சந்தைகள் எல்லாம் இயங்காது நிர்கதி நிலையில் வசிக்கும் கல்முனை மக்களின் வாழ்வாதார நிலையைகளையும், தமிழ் சகோதர்களின் எதிர்வரும் தைப்பொங்கல் பண்டிகையையும் கவனத்தில் கொண்டு துரிதகெதியில் இரண்டாம் கட்ட உலருணவு பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நசீர் அவர்களை கேட்டுக்கொண்டதுக்கு இணங்க அவசரமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தனக்கு உறுதியளித்துள்ளார் என திகாமடுல்ல மாவட்ட கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சமகால நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டில் பரவலாக பரவி வரும் கொரோனா அலையின் வீரியம் கல்முனை பிராந்தியத்தில் வெகுவாக பரவிவிடாமல் தடுக்க வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு சந்தை தொகுதி திறக்காமல் மூடப்பட்டு சுகாதார துறையினருக்கும் பாதுகாப்பு படைவீரர்களுக்கு கல்முனை மக்கள் வழங்கும் ஒத்துழைப்பு பாராட்டதக்கது. இந்த காலகட்டத்தில் வாழ்வாதாரம் சீராக இல்லாது கஷ்டப்படும் அந்த மக்களுக்கு இந்த உலருணவு பொதிகள் சிறிய ஆறுதலாக அமைகிறது. இவ்விடயத்தில் சிறப்பாக இயங்கும் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நசீர் அவர்களுக்கும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :