தரணியில் தமிழர் வாழ்வில் பொங்குமா பொங்கல்?



காரைதீவு சகா-
பொங்கல் என்பது தமிழர்களால் பாரம்பரியமாக சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டான தைப்பொங்கல் திருநாள் இன்று மலர்ந்திருக்கிறது. இப்பொங்கலாவது தரணியில் தமிழர் வாழ்வில் விடிவை ஏற்படுத்துமா?

இவ்வாறு தனது பொங்கல் வாழ்த்துச்செய்தியில் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளரும் த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நம்பிக்கை நட்சத்திரமாகவிளங்கும் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
நாட்டில் கொரோனா தீநுண்மியின் தாக்கம் காரணமாக தைப்பொங்கல் பண்டிகை சற்றுக் களையிழக்கலாம். எனினும் பாரம்பரியமாக தமிழ்மக்கள் பண்டுதொட்டு கைக்கொண்டுவருகின்ற நடைமுறைகள் அனைத்தும் இலகுவில் பின்பற்றக்கூடியவை. எனவே பாரம்பரியத்தில் குறைவில்லாமல் அதேவேளை குதூகலமாக அனைவரும் இணைந்து சேர்ந்து கொண்டாடஇயலாத சூழலில் கொண்டாடநேரிட்டுள்ளது.

கடந்த பல வருடங்களாக தமிழ் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களுக்குத் தீர்வு காணும் வருடமாக இவ்வருடம் அமைய வேண்டும் என்பதுடன் பிறந்திருக்கும் தைத்திருநாளில் மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்போம்.மக்கள் வாழ்வில் ஒளி பொங்க அல்லல் நீங்க இத்தைத்திருநாளில் இறைவனை வேண்டுவோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :