சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயற்சி! 500 க்கும் மேற்பட்டோர் கைது!



பி.எஸ்.ஐ.கனி-
விவசாயிகளுக்கு எதிராக மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ரிசர்வ் வங்கி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மாநில செயலாளர் அமீர் ஹம்ஸா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன் முன்னிலை வகித்தார்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், வடசென்னை மாவட்ட தலைவர் முகமது ரசீத், மத்திய சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா, தென்சென்னை மாவட்ட தலைவர் சலீம், பொதுச்செயலாளர் அன்சாரி, மற்றும் தொகுதி, வட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டம் குறித்து மாநில செயலாளர் அமீர் ஹம்சா பேசியதாவது,

மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு விரோதமாக கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லியின் எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 43 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், அந்த சட்டங்களில் உள்ள விவசாய மற்றும் மக்கள் விரோத அம்சங்கள் குறித்து மக்களுக்கு விளக்கும் வகையிலும் டிசம்பர் 26 முதல் ஜனவரி 05 வரை ‘விவசாயிகளின் விரோதி மோடி!’ என்ற போராட்ட இயக்கத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நாடு முழுவதும் தீர்மானித்து நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று (ஜனவரி 08) சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே மத்திய அரசு உடனடியாக நம் நாட்டிற்கு எதிரான வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

போராட்டத்தின்போது ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற சுமார் 500க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :