கிழக்கில் 12 மணிநேரத்தில் 58பேருக்கு தொற்று!மொத்தத்தொற்று 1500 ஜக் கடந்தது:09மரணங்கள்
வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணிநேரத்தில் 58பேருக்கு கொரோனாத்தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த 58பேரில் 20பேர் காத்தான்குடியிலும் 08பேர் கல்முனை தெற்கிலும் 07பேர் உகனையிலும் 5பேர் நிந்தவுர் மற்றும் மூதூர் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கிழக்கில் கொரோனாத்தொற்றுக்களின் எண்ணிக்கை நேற்றையதினம்(8)வெள்ளி;கிழமை 1516 ஆகியது.

புத்தாண்டில் கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் திவீரமாகிவருகின்றது.நேற்றுமுன்தினம் 12மணிநேரத்தில் அதிகூடிய 60பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதமிருந்து பேலியகொட மூலமாக இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 332பேரும் கல்முனை பிராந்தியத்தில் 915பேரும் திருமலை மாவட்டத்தில் 193பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 53பேருமாக 1493பேர் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.

மேலும் வெளிநாடு மினுவாங்கொட கந்தக்காடுகொத்தணி வெலிசற கடற்படைமுகாம் போன்ற மூலங்களிலிருந்து மீதி 23 தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளன.

09மரணங்கள்!
இதுவரை கிழக்கில் சம்மாந்துறை ஒலுவில் சாய்ந்தமருது அட்டாளைச்சேனை வவுணதீவு ; காத்தான்குடி நாவிதன்வெளி ஆயைடிவேம்பு இறுதியாக உகனையிலும் மொத்தம் 09 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.

கல்முனைப்பிராந்தியத்தில் 06பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 02பேரும் அம்பாறைப்பிராந்தியத்தில் ஒருவருமாக இந்த 09 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.

இத்தரவுகளை கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் வெளியிட்டுள்ளது.

கல்முனை பிராந்தியத்தில் 915..

கல்முனைப்பிராந்தியத்தில் 915ஆக தொற்றுக்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன. இப்பிராந்தியத்துள்வரும் அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை 877பேர் இனங்;காணப்பட்டுள்ளனர்.

அதில் அக்கரைப்பற்று 312 தொற்றுக்கள் அடுத்ததாக கல்முனை தெற்கு 219 அட்டாளைச்சேனை 87 பொத்துவில் 77 சாய்ந்தமருது 55 ஆலையடிவேம்பு 36 இறக்காமம் 24 சம்மாந்துறை 27 நிந்தவுர் 18 கல்முனைவடக்கு 17 திருக்கோவில் 15 காரைதீவு 14 நாவிதன்வெளி 14 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கல்முனை மாநகரில் 291
அதேவேளை கல்முனை மாநகரஎல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 291 தொற்றுக்களாக அதிகரித்திருக்கிறது.

கல்முனை தெற்கி;ல் 219பேரும் சாய்ந்தமருதில் 55பேரும் கல்முனை வடக்கில் 17பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனையின் 11 கி.சே.பிரிவுகளில் முடக்கச்செயற்பாடு 10வது நாளாக அமுலில்உள்ளது.

மட்டக்களப்பில் 332...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 332ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கூடியதாக காத்தான்குடியில் 145 பேரும் கோறளைப்பற்றில் 68 பேரும் களுவாஞ்சிக்குடியில் 31பேரும் மட்டக்களப்பில் 26பேரும் ஏறாவூரி;;ல் 18 ஓட்டமாவடியில் 17பேரும் பேரும் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.

திருமலையில் 193...
திருமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 193ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் திருமலை நகரில் 97பேரும் மூதூரில் 47பேரும் கிண்ணியாவில் 18பேரும் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளனர்.அங்கு ஆறு பாடசாலை மாணவர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது.

கிழக்கில் ஆகக்குறைந்த கொரோனாத்தொற்றாளர்கள்53பேர் அம்பாறை சுகாதாரப்பிரிவிலும் ஆகக்கூடிய தொற்றாளர்கள் 915பேர் கல்முனை சுகாதாரப்பிரிவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

44606பேருக்கு பிசிஆர் பரிசோதனை

இதுவரை கிழக்கில் 44606பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவற்றுள்.
கல்முனைப்பிராந்தியத்தில் 21243 சோதனைகளும் மட்டக்களப்பில் 13176 சோதனைகளும் அம்பாறையில் 3423 சோதனைகளும் திருகோணமலையில் 6764 சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

08 சிகிச்சை நிலையங்களில் 2795 அனுமதி

கிழக்கில் இதுவரை 06கொரோனா சிகிச்சை நிலையங்கள் இருந்துவந்தன. புதிதாக மட்டுமாவட்டத்தில் பெரியகல்லாறு மற்றும் திருமi மாவட்டத்தில் குச்சவெளியிலும் இரு வைத்தியசாலைகள் சிகிச்சை நியைங்களாக மாற்றப்பட்டுள்ளன. அத்துடன் கிழக்கில் 08 கொரோனா சிகிச்சை நிலையங்களாகியுள்ளது.

கிழக்கிலுள்ள 08 கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 518கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று (08.01.2021) வெள்ளிக்;கிழமை வரை 2795பேர் மேற்படி 8 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 2262பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.15பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 914பேர் அனுமதிக்கப்பட்டு 768பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 139பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். நால்வர் இடமாற்றப்பட்டிருந்தனர்.இன்னும் 19 கட்டில் தேவையாகவுள்ளன.
மேலும் ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 70 பேரும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 114 பேரும் பதியத்தலாவ சிகிச்சை நிலையத்தில் 5பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 50 பேரும் மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 83 பேரும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டபெரியகல்லாறு சிகிச்சை நிலையத்தில் 23பேரும் குச்சவெளி சிகிச்சை நிலையத்தில் 49பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :