பள்ளிவாசல்களில் தொழுகை நடவடிக்கைகளுக்காக 50 பேர் பங்குபற்றலாம்.



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய் காரணமாக கடந்த சில மாதங்களாக அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அரசாங்கமும், சுகாதார தரப்பினரும் அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்ததுடன் மதஸ்தளங்களில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக ஒரே நேரத்தில் 25 பேருக்கே சமய நடவடிக்கைகளில் ஈடுபடலாம் எனவும் அறிவித்திருந்து.

மேற்படித் தொகை இன்றிலிருந்து (06) 50 பேர் வரை ஒரே நேரத்தில் மதஸ்தளங்களில் சமய நடவடிக்கைகளுக்காக பங்குபற்றலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன மதவிகார அமைச்சின் செயலாளர் கபில குணவர்ததன மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் பர்ஷான் மன்சூர் தெரிவத்தார்.

இந்த வகையில் நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் 50 பேர் தொழுகை நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. ஏனவே சகலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வணக்க வழிபாடுகிளல் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்விடம் தொடர்பான அறிவித்தல் ஒன்றை அமைச்சின் செயலாளர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளருக்கும் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :