கொவிட்-19 தொற்று நோயினால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் - சிவில் சமூகத்தின் கோரிக்கை



இலங்கையின் முதன்மையான மருத்துவ வாண்மையாளர்களின் அறிவுரையைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் கொவிட்-19 தொற்று நோயினால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு
அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் - சிவில் சமூகத்தின் கோரிக்கை

ஜனவரி 4, 2020
தன் கீழ்க் கையொப்பமிடும் தனி நபர்கள் மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் ஆகிய நாம் இலங்கையின் மருத்துவத் துறையில் முதன்மையான மற்றும் அதிகாரம் மிக்க தனி நபர்கள் மற்றும்

நிறுவனங்கள் கொவிட்-19 தொற்று நோயினால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதித்திருப்பதை வரவேற்கின்றோம். எனவே, இவ்வறிவுரையைக் கருத்திற் கொண்டு, உடனடியாக

வலிந்த தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருமாறு அரசாங்கத்தைக் கோருகின்றோம்.
கடந்த வாரத்தில், இலங்கையின் உயர் வைரஸ் கிருமி தொடர்பான நிபுணர்கள் மற்றும் முன்னணி மருத்துவ நிறுவனங்கள் காணப்படும் விஞ்ஞானச் சான்றுகளுக்கேற்ப கொவிட்-19 தொற்று நோயினால்
இறந்தவர்களை அடக்கம் செய்வது அனுமதிக்கப்பட முடியும் என வெளிப்படையாக அறிவித்தனர்.

ஜனவரி 02 ஆம் திகதி இலங்கை மருத்துவர்கள் சங்கம் (SLMA) கொவிட்-19 தொற்று நோயினால் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியும் என உறுதி செய்யும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில் 'குறித்த வைரஸ் இறந்த உடல்களில் தொற்றடையும் நிலையில் காணப்படும் சாத்தியமில்லை' எனக் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் கொவிட்-19 தொற்றினால் இறந்தவர்களின் உடலைப் புதைப்பதால்
பொதுமக்கள் சுகாதாரத்துக்கு தீங்கு ஏற்படும் என விஞ்ஞான ரீதியான சான்றுகள் உலகின் எப்பாகத்தில் இருந்தும் பெறப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த டிசம்பர் 31, 2020 அன்று இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி (CCPSL) இதே போன்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கொவிட்-19 தொற்று நோய் தொடர்பில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள
85,000 மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளில் எந்த ஒரு கட்டுரையிலும் இறந்த உடலில் இருந்து வைரஸ் பரவும் எந்த ஒரு சம்பவமும் பதிவு செய்யப்படவில்லை என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கொவிட்-19 தொற்று நோயினால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதால் நிலக்கீழ் நீர் மாசடையும் என்ற வாதத்தை தகர்க்கும் வகையில் CCPSL இன் மேற்குறிப்படப்பட்ட நிலைப்பாட்டு
அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “SARS-CoV-2 வைரஸ் நிலக்கீழ் நீரினால் பரவும் என்ற வாதம் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை அத்துடன் இவ்வைரஸ் குடிநீரினால்
கடத்தப்படுவதற்கான எவ்வித எடுத்துக் காட்டுகளும் இல்லை'.

உலகின் புகழ்பெற்ற வைரஸ் ஆய்வு அறிஞரான இலங்கையின பேராசியர் மலிக் பீரிஸ் மற்றும் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினரான சிரேஷ;ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் இலங்கை அரசாங்கத்தின் தகனம் மாத்திரம் என்ற கொள்கையை சவாலுக்கு உட்படுத்தும் வகையிலும் பாதுகாப்பான நல்லடக்கத்துக்கு ஆதரவாகவும் தமது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
SLMA மற்றும் CCPSL ஆகிய இரு அமைப்புகளும் இறந்தவர்களின் உடலினை அடக்கம் செய்வதால் தொற்று பரவலைடையும் அபாயத்தை விட கொவிட்-19 நோயாளிகளின் கழிவுகளால் நீர் வழங்கல் தொற்றடையும் அபாய நேரிடர் அதிகமானது என வாதிடுகின்றன.

மேற்குறிப்பிடப்பட்ட உறுதியான மற்றும் அதிகாரபூர்வமான மருத்துவ அறிவுரைக்கு ஏற்ப அரசாங்கம் கொவிட்-19 தொற்றினால் மரணமடைந்தவர்களின் உடல்கள் நல்லடக்கம் மற்றும் தகனம்
செய்யப்படுவதை சாத்தியமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இதன் கீழ்க் கையொப்பமிடும் நாம் வலியுறுத்துகின்றோம். இக்கொள்கையே கடந்த மார்ச் 31, 2020 வரை அமுலில் இருந்தது. எனினும், அதன் பின்னர் எதிர்பாராத வகையில் சுகாதார அமைச்சு கொவிட்-19 தொற்று நோயினால் இறந்தவர்களை தகனம் மாத்திரமே செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலை வழங்கியது.
அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஊடகக் கட்டுரைகள் மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் தொற்றுள்ளவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கும் இக்கொள்கை பிரயோகிக்கப்படுவதை சுட்டிக் காட்டின. இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபை வதிவிடப் பிரதிநிதி, ஐக்கிய நாடுகள் சபையின்
விசேட அறிக்கையாளர்கள், OIC அமைப்பின் நிரந்தர மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற சர்வதேச அமைப்புகள் அமர புர மஹா சங்க அபாவ மற்றும் ராமன்ன மஹா நிகாய உள்ளடங்கலான
இலங்கையின் மதத் தலைவர்கள், சிவில் சமூக நிறுவனங்கள் மற்றும் கரிசனை கொண்ட குடிமக்கள் போன்ற எண்ணற்ற தரப்பினர் மேற்கொண்ட வேண்டுகோள்களுக்கு மத்தியிலும் இக்கொள்கை
அரசாங்கத்தினால் பிடிவாதமாக பின்பற்றப்பட்டு வருகின்றது.

இலங்கையின் சொந்த மருத்துவ சமூகம் கொவிட்-19 தொற்றினால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆதரவளிக்கும் நிலையில் இலங்கையின் மதச் சிறுபான்மையினரை பாகுபாட்டுக்கு உட்படுத்தும் அரசாங்கத்தின் தகனம் மாத்திரம் என்ற கொள்கையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான எந்த வித வாய்ப்புகளும் இல்லை.

வலிந்த தகனத்தினால் ஏற்படும் மத மற்றும் கலாச்சார பின் விளைவுகள் சமூகங்களின் சக வாழ்வு மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றைப் பாதிப்பது மாத்திரமன்றி பொதுமக்களின், குறிப்பாக பாதிக்கப்பட்ட குழுக்களின் பொதுச் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு என்பவற்றில் கட்டுப்படுத்த முடியாத பிரச்சினைகளை
ஏற்படுத்தும் என மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு மருத்துவ அமைப்புகளும் சுட்டிக்காட்டுகின்றன.

கொவிட்-19 தொற்று நோயினால் இறந்தவர்களின் உடல்களைக் கையாளுதல், மரணச் சடங்குகளில் பங்கேற்றல் மற்றும் சமூக ஒன்று கூடல் என்பவற்றுடன் இணைந்துள்ள கொவிட்-19 தொற்றுப் பரம்பல்
அபாய நேரிடர் பற்றி நாம் நன்கு உணர்ந்துள்ளோம், எனவே இந்நடவடிக்கைகளின் சட்டபூர்வமான கட்டுப்பாடுகளுக்கு நாம் ஆதரவளிப்போம். கடந்த காலத்தைப் போன்று அவ்வாறான நடவடிக்கைகளுக்கு இலங்கையின் அனைத்துச் சமூகங்களும் ஆதரவளிக்கும் என்பதில் ஐயமில்லை.

விஞ்ஞான ரீதியான சான்றுகள் எவையுமற்ற நிலையில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் வலிந்த தகனக் கொள்கை குறிப்பிட்ட மதக் குழுக்களுக்கு மிகவும் துன்பத்தையும் வேதனையையும் வழங்குகின்றது, எனவே அக்கொள்கை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். எனவே, மருத்துவத் துறையில் உள்ள கௌரவம் மிக்க இந்தத் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளால் வழங்கப்பட்டுள்ள தெளிவான அறிவுரைக்கு செவி சாய்த்து சிறுபான்மை மதக் குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்கள் தமது இறந்த உடலங்களை தடைகளின்றி அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

மேலொப்பமிட்டோர்:

Individuals

1. A.M. Ranawana

2. A. Somalingam

3. Amalini de Sayrah

4. Ambika Satkunanathan

5. Anithra Varia

6. Anne-Marie Fonseka

7. Annouchka Wijesinghe

8. Anthony Jesudasan - Human Rights Defender

9. Anthony Vinoth

10. Anuratha Rajaretnam

11. Anushani Alagarajah

12. Aritha Wickramasinghe

13. Bishop Duleep de Chickera

14. Bishop Kumara Illangasinghe

15. Channaka Jayasinghe

16. Deekshya Illangasinghe

17. Dinusha Panditaratne

18. Dr. Jehan Perera

19. Dr. K. Guruparan - Attorney- at-law

20. Dr. Lionel Bopage

21. Dr. Mario Gomez

22. Dr. P. Saravanamuttu

23. Dr. Radhika Coomaraswamy

24. Dr. Tara de Mel

25. Fr. Manoj Rasanjana

26. Fr. Terence Fernando

27. Geethika Dharmasinghe

28. Gehan Gunatilleke

29. Godfrey Yogarajah

30. Gowthaman Balachandran

31. Ian Ferdinands

32. Joanne Senn

33. K.J. Brito Fernando

34. Kshama Ranawana

35. Kumudini Samuel

36. Lasantha Ruhunage

37. Mahishaa Balraj

38. Marisa de Silva

39. Midushaun Rhodes

40. Nagulan Nesiah

41. Nahdiya Danish

42. Nethmini Indrachapa Medawala

43. Nilshan Fonseka

44. Niran Wirasinha - Reconciliation and Peace Desk

45. Niyanthini Kadirgamar

46. P. Muthulingam

47. P.N. Singham

48. Philip Dissanayake

49. Prabodha Rathnayaka

50. Prof. Jayadeva Uyangoda

51. Prof. S. Ratnajeevan Hoole

52. Prof. Sumathy Sivamohan

53. Professor Chandraguptha Thenuwara

54. Ralston Weinman

55. Rev. Andrew Devadason - Vicar, St . Paul's Church, Milagiriya

56. Rev. Asiri P Perera (Former President Bishop Methodist Church Sri Lanka)

57. Rev. Dr. Jayasiri Peiris

58. Rev. Fr. F. C. J. Gnanaraj (Nehru)

59. Rev. Fr. Jeyabalan Croos

60. Rev. Fr. Nandana Manatunga

61. Rev. Fr. Rohan Peries

62. Rev. Fr. Sarath Iddamalgoda

63. Rev. Marc Billimoria

64. Rev. Sr. Deepa Fernando

65. Rev. Sr. Nichola Emmanuel

66. Rev. Sr. Noel Christine Fernando

67. Rev. Sr. Rasika Pieris

68. Ruki Fernando

69. Ruwan Laknath Jayakody

70. S. Thilipan

71. S.C.C. Elankovan

72. Sajini Wickramasinghe

73. Sakuntala Kadirgamar

74. Sandun Thudugala

75. Sandya Ekneligoda

76. Sanjana Hattotuwa

77. Sarah Arumugam

78. Sarala Emmanuel

79. Selvaraja Rajasegar (Editor, www.maatram.org)

80. Seneka Perera

81. Senel Wanniarachchi

82. Sheila Richards

83. Stella J. J. Victor

84. Sugath Rajapaksha

85. Swasthika Arulingam - Attorney-at-law

86. Thanuki Natasha Goonesinghe

87. Ven. Fr. Samuel J Ponniah - Archdeacon of Jaffna, Church of Ceylon (Anglican)

88. Visaka Dharmadasa

89. Yasith De Silva

Organisations

1. Alliance for Minorities

2. Association of War Affected Women

3. Centre for Policy Alternative

4. Centre for Society and Religion

5. Dabindu Collective

6. Eastern Social Development Foundation

7. Families of the Disappeared

8. Forum for Affected Families, Mannar

9. Hashtag Generation

10. Human Elevation Organisation

11. Human Rights Office (HRO)

12. Institute of Social Development

13. International Centre for Ethnic Studies (ICES)

14. iProbono

15. Law and Society Trust

16. Lawyers Forum for the People Committee to Protecting Rights of Prisoners.

17. Liberation Movement

18. Mannar Women’s Development Federation

19. National Peace Council

20. Right to Life Human Rights Centre (R2L)

21. Rights Now Collective for Democracy

22. Rural Development Foundation

23. Sangami Penkal Collective

24. Shramabhimani Kendraya

25. Sisterhood Initiative

26. Suriya Women Development Centre

27. Women and Media Collective

28. Women Education Research Centre (WERC)

29. Women’s Action Network



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :