டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் உட்பட 09 பேர் சுயதனிமையில்

நோட்டன் பிரிஜ் எம்.கிருஸ்ணா-

டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் மூவர் உட்பட ஒன்பது பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு உடற்பரிசோதனைக்கு வந்த ஒருவக்கு தொற்று உறுதியானதையடுத்தே வைத்தியசாலையிலேயே மேற்குறிப்பிட்ட ஒன்பது பேர் 11/01 இன்று முதல் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்,


கடந்த 08 ஆம் திகதி அட்டன் பகுதியை சேர்ந்த ஒருவர் உடற்பரிசோதனைக்கு கிளங்கன் வைத்தியசாலைக்கு வந்துள்ளார் .


இவரையும் இன்னுமொறுவருமாக இருவரை 09 ஆம் திகதி கண்டி வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கண்டி மாவட்ட வைத்தியசாலையில் இவர்களுக்கு மேற்கொண்ட பி.சிஆர் பரிசோனையிலே அட்டன் நபருக்கு தொற்று உறுதியாகியுள்ளது


இதனையடுத்து, குறித்த நபரோடு தொடர்பை பேணிய டிக்கோயா மாவட்ட வைத்திய வைத்தியசாலையில் கடமையாற்றும் மூன்று வைத்தியர்கள் மூன்று தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் மூவருமாக ஒன்பது பேர் வைத்தியசாலையிலேயே சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்


மேலும் ,தொற்குள்ளான அட்டன் நபரின் உறவினர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :