உலகின் எடைகுறைந்த செயற்கைகோளை உருவாக்கி சாதனை புரிந்த மாணவர் ரியாஸ்தீனுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் வாழ்த்து.

லகின் எடைகுறைந்த செயற்கைகோளை உருவாக்கி சாதனை புரிந்த மாணவர் ரியாஸ்தீனுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முகமது சேக் அன்சாரி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உலகின் எடை குறைந்த செயற்கைகோளை உருவாக்கி இந்திய நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கும் தஞ்சை கரந்தை பகுதி பொறியியல் மாணவர் ரியாஸ்தீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மாணவர் ரியாஸ்தீன் வடிவமைத்து உருவாக்கிய விஷன் சாட் V1 மற்றும் V2 ஆகிய இரு செயற்கைகோள்களையும் நாசா எனும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 2021ல் விண்ணில் ஏவவிருப்பது நாட்டிற்கும் தமிழகத்திற்கும் கூடுதல் பெருமை சேர்க்கும்.

அறிவியல் உலகும் வியக்கும் வகையில் தொடர்ந்து மென்மேலும் புதிய கண்டுபிடிப்புகளுடன் வளர்ச்சியடைய மாணவர் ரியாஸ்தீனுக்கு வாழ்த்துக்கள்.

மாணவர் ரியாஸ்தீனை போன்று அறிவியல் உலகில் தொடர்ந்து சாதனை புரிந்து வரும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு உரிய செயல்திட்டத்தினை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :