"ஹரிதாபிமானி" தேசிய மரம் நடும் வேலைத்திட்டம்

சுல்தான் ஜஸீல்-

ற்பிட்டி பிரதேசத்தை மையமாகக் கொண்டு, கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா மற்றும் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டின் கீழ் அல் - பாரித் மக்கள் அடிப்படை அமைப்பின் அனுசரணையுடன் நடைபெற்ற "ஹரிதாபிமானி" தேசிய மரம் நடும் வேலைத்திட்டம் இன்று (24.12.2020) பள்ளிவாசல்த்துறை முஸ்லிம் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றபோது.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் அலி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண இளைஞ்ஞர் அமைப்பாளர் நிரோஷன், அல் - பாரித் மக்கள் அடிப்படை அமைப்பின் தலைவர் நியாஸ், ஊர் பிரமுகர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதே போன்ற நிகழ்வொன்று பள்ளிவாசல் துறை முசல்பிட்டி மற்றும் முதலைப்பாலி கிராம உத்தியோகத்தர் பகுதிகளிலும் நடைபெற்றது இந்நிகழ்வில் முன்னநாள் பிரதேச சபை தலைவர் மற்றும் முன்னால் மாகாண சபை உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம். ரியாஸ் அவர்கள் கலந்து கொண்டி சிறப்பித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :