ஜனாஸா எரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்-

பாறுக் ஷிஹான்-

னாஸா எரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் அம்பாறை மாவட்டம் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்சாய்ந்தமருது கிளையின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது அல் ஹிலால் பாடசாலைக்கு அருகாமையில் இன்று (24) மதியம் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டம் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையின் போராட்டமானது குறித்த பள்ளிவாசலில் ஆரம்பிக்கப்பட்டு பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பிரதான வீதிக்கு சென்றடைந்து பின்னர் முடிவுறுத்தப்பட்டது.

இதில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டதுடன் இப்போராட்டத்தில் ஜனாஸா எரிப்புக்கு எதிரான வாசகங்கள் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டன.

இவ்வாசகங்களில் நிபுணத்துவர்களா?இல்லை பழி தீர்க்கும் காடையர்களா? ஏமாற்றாதே புதைக்க வழி இல்லை என ஏமாற்றாதே வழங்கி விடு வழங்கி விடு முஸ்லீம் கிறிஸ்தவ உரிமையை வழங்கி விடு ஜனாதிபதியே பிரதமரே பிஞ்சுக் குழந்தையை தீயில் கருக்கியது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா போன்றவை குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :