வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி டிசம்பர் 8-ம் தேதி விவசாயிகள் தேசம் தழுவிய அளவில் முழு அடைப்பு ( பாரத் பந்த்) க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் வேளாண் சட்டத்துக்கான அவசரச்சட்டத்தை, மத்தியில் ஆளுகின்ற மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு அவசர கதியில் கொண்டுவந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒட்டு மொத்த தேசமும் தீவிரமாக இருந்தபோது, இந்த அவசரச் சட்டங்களை கொண்டுவருவதில் மத்திய அரசு தீவிரம் காட்டியது ஏன்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த பத்து நாளாக தொடரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப்பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது. விவசாயிகள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே ஐந்து கட்ட பேச்சுவார்த்தை முடிந்த போதிலும், எந்தவிதமான சுமூக தீர்வும் எட்டப்படவில்லை.
எனவே விவசாயிகள் அகில இந்திய அளவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும்
டிசம்பர் 8 அன்று நடைபெற உள்ள தேசம் தழுவிய முழு அடைப்புக்கு
காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ், டி.ஆர்.எஸ் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், எஸ்.டி.பி.ஐ கட்சி, திமுக விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
விவசாய சங்கங்களும், தொழிலாளர் சங்கங்களும், வர்த்தக சங்கங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 8 முழு அடைப்பிற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றன.
0 comments :
Post a Comment