அட்டாளைச்சேனையில் 5000/= பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் விநியோகம்...


றாசிக் நபாயிஸ்-
ம்பாறை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்  பிரிவில் கொவிட் தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள 9107 குடும்பங்களுக்கு 5000 ரூபா பெறுமதியான அத்தியவசிய உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வேலைத்திட்டத்திற்கமைய, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட திராய்க்கேணி கிராமத்திற்கான நிவாரணப் பொதி வினியோகம் இடம் பெற்றன. 
 
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கான உலர் உணவு நிவாரணப் பொதிகள் வழங்கும் பணியினை அரசாங்கம் துரிதமாக முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைவாக, அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கவின் பணிப்புரை மற்றும் அவரது ஒத்துழைப்பின் பேரில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலியின் நேரடி கண்காணிப்பிற்கமைய உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அகமட் நசீல், கணக்காளர் ஏ.எல்.எம். றிபாஸ். கிராம சேவையாளர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர் உள்ளிட்ட பிரிவிற்கான சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இப்பொதிகளில் அரிசி, சீனி, பருப்பு கோதுமை மா பால்மா பைக்கற் மற்றும் பெண்களுக்கான கைஜின் பொருட்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலமுனை, ஒலுவில், தீகவாபி மற்றும் அட்டாளைச்சேனை அகிய கிராமங்களின் 32 கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 9107 சமுர்த்தி நிவாரணம் பெற்றுவருகின்றவர்களுக்கும், பெறத்தகுதியானவர்களுக்குமாக சுமார் 9 கோடி ருபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது இரு கட்டங்களாக வழங்கப்படவுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :